பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வாழ்க்கைச் சுவடுகள் 'ஏதோ பார்த்த இடத்தில் கேட்டதை மரியாதைக்குறைவாக எண்ணிவிடக் கூடாது அதற்காகத்தான் வீட்டிற்கே வந்து உங்களிடம் கதை கேட்க வேண்டும் என்று வந்தோம். ஈஸ்வரன் உளநெகிழ்ச்சி அடைந்தார். அப்படி எல்லாம் நான் நினைக்க மாட்டேன்' என்றார். - மஞ்சேரி எஸ். ஈஸ்வரன் பெரிய எழுத்தாளர். ஆங்கிலத்தில் கதைகள் எழுதிப் பெயர் பெற்றிருந்தார். தமிழிலும் அவர் கதைகள் வெளிவந்தன. 'சக்தியில் அவருடைய கதைகள் பல வந்திருந்தன. அவற்றை எல்லாம் தி.ஜர. தமிழாக்கியதாக அவரே சொன்னார். ஈஸ்வரன் கதைகள் 1930களில் 'தினமணி மலர்களிலும் பிரசுரமாகியிருந்தன. மறக்க முடியாத கதைகள் பல. அவற்றை நான் குறிப்பிட்டுச் சொன்னேன். அவர் வியப்பும் மகிழ்ச்சியும் தெரிவித்தார். 'எப்பவோ வந்த கதைகளைப் படித்து, நன்றாக ஞாபகம் வைத்திருந்து சொல்கிறீர்களே. எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்றார். நாங்கள் விடைபெற்றுப் புறப்படும் போதும், மலருக்கு நீங்கள் அவசியம் கதை எழுதி அனுப்ப வேண்டும் மறந்துவிடக்கூடாது என்று திருலோகம் நினைவுபடுத்தினார். 'மறக்கமுடியுமா என்ன நல்ல இலக்கிய ரசிகர்களான நீங்கள் இரண்டு பேரும், இருட்டில் சிரமப்பட்டு வீடு தேடி என்னைப் பார்ப்பதற்காகவே வந்திருக்கிறீர்கள். கட்டாயம் கதை எழுதி அனுப்புவேன்' என்று ஈஸ்வரன் சொன்னார். ஆனாலும் மலருக்கு அவர் கதை எழுதி அனுப்பவில்லை. தி. நா. சுப்ரமணியத்தை கீமர் அன் கம்பெனியில் போய்ப் பார்த்தோம் அவர் அங்குப் பணிபுரிந்து கொண்டிருந்தார். சரித்திரத்தில் உள்ள சிறுவிஷயங்களை - சின்னத் தகவல் அல்லது குறிப்பை வைத்துக் கொண்டு ரசமான கதைகள் எழுதி வந்தார் அவர் தோட்டியை மணந்த ராஜகுமாரி' என்ற பெயரில் அவருடைய சிறுகதைகள் புத்தகமாக வந்திருந்தன. கட்டபொம்மு வரலாற்றை ஆராய்ந்து ஒரு நூலும் எழுதியிருந்தார். சென்னை எழுத்தாளர்கள் பலரையும் திருலோக சீதாராம் உதவியோடு ஒரு தடவை சந்தித்ததுதான். நான் திரும்பவும் அவர்களைப் பார்த்துப் பேச GమిGు எனறு ఘ్రాత్రమణయి. ஆனால் புதுமைப்பித்தனை அநேக தடவைகள் அவர் வீட்டுக்குப் போய் பார்க்க நேரிட்டது. அதற்கான காரணமே வேறு. கிராம ஊழியன் மலருக்குக் கதை கேட்பதற்கு என்று திருலோகமும் நானும் புதுமைப்பித்தனைத் தேடிப்போனோம். ராயப்பேட்டை