பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வாழ்க்கைச் சுவடுகள் நெருப்பு வைக்க என்று தொடங்கி, எட்டு வரிகளில் முடிந்த கவிதை, அதுதான் அவருடைய முதல் கவிதை 15 சில நாட்களின் திருலோக சீதாராம் துறையூருக்குப் போய்விட்டார் அவர் சென்னையில் இருந்த நாட்களின் தினமும் என்னிடம் நீங்கள் கிராம ஊழியனுக்கு வந்துவிடுவதே நல்லது என்று சொல்விக் கொண்டிருந்தார் . 'என்னோடேயே புறப்பட்டு வந்து விடுங்கள். நவசக்தி சரிவர நடக்காது' என்று அவர் கடைசி நாளிலும் சொன்னார். நண்பர் சக்திதாசன் என்னைச் சென்னைக்கு வரும்படி அழைத்தார். நான் வந்துள்ள போது அவர் இல்லை. அவரைப் பார்க்காது. அவரிடம் கலந்து ஆலோசிக்காது. நான் வருவதற்கில்லை. அப்படி வருவது முறையல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது என்றேன். 'உங்கள் இஷ்டம். நன்றாக யோசித்து முடிவு செய்யுங்கள் என்று கூறிப் பிரிந்தார் திருலோகம் நான் தனியாகச் சென்னை நகரைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டேன். பல இடங்களுக்கும் போனேன். இன்றைய ஜனப் பெருக்கமும் பேக்குவரத்து நெரிசலும் இல்லாதிருந்த நகரம் அது மவுண்ட்ரோடில்கூட அங்கங்கே ஓங்கி வளர்ந்த மரங்கள் நின்ற காலம். திருவல்லிக்கேணியில் தென்னந்தோப்புகளும், கள்ளுக்கடைகளும் அதிகம் தென்பட்ட காலமும்கூட. திருவல்லிக்கேணி பெல்ஸ்ரோடில் ஜோதி நிலையம் இருந்தது. அ.கி. ஜயராமன் நடத்திய புத்தகப் பிரசுரநிறுவனம். அவர் இந்தியிலிருந்து மொழிபெயர்த்த நாவல்கள், நாடகங்களையும் க.நா. சுப்ரமண்யம், புதுமைப்பித்தன் முதலியவர்களது படைப்புகளையும் புத்தகங்களாக்கி வெளியிட்டது ஜோதி நிலையம்' சர்வதேசக் கதைமலர்கள் என்று பல நாடுகளின் கதைகளையும் தமிழாக்கி, எட்டனா விலையில் பிரசுரித்தது. தரமான இலக்கிய வெளியீடுகள் அவை. நான் அ.கி. ஜயராமனைச் சந்தித்தேன். சினிமா உலகம் பி.எஸ். செட்டியார் மூலம் அவர் என்னைப் பற்றி அறிந்திருந்தார். கலைமகளில் வந்த கதைகளையும் படித்திருந்தார். அவர் என்னை அன்புடன் வரவேற்று உரையாடினார். புத்தகங்கள் தந்தார். . ஜோதி நிலைய வெளியீடுகள் எனக்குத் தொடர்ந்து கிடைத்தன. அ.கி.ஜ.வின் அன்பளிப்பு வெகுகாலம் வரை வந்து எனது நூல்நிலையத்தை வளம் செய்தது. .