பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99


உச்சக்கட்ட நிகழ்ச்சிக்குப் பிறகு, உச்சஸ்தாயிக்குப் பிறகு இறக்க நிலை போலவே, முதுமை வருகிறது. ஆட். கொள்ளுகிறது. வாழ்க்கைப் பயணத்தை மேடு பள்ளத் திற்கு ஒப்பிட்டுக் காட்டுவார்கள். அடிவாரத்திலிருந்து புறப்பட்டு மேல் நிலையை அடைவது போல (Peak). இளமையை அடைந்து, அங்கிருந்து இறங்குமுகமாகப் போவது போலவே, வாழ்க்கைத் தொடர்கிறது. அதனல் தான், இளமையை வாழ்க்கையின் மேல்நிலை என்கிருேம். வளர்ச்சியின் சிகரம் என்கிருேம். இயற்கை நியதியால். கால சுழற்சியால், குழந்தையாக இருந்தவர்கள் வளர்கிரு.ர்கள். உடல் வளர்ச்சியுடன் உள்ளமும் விரிகிறது. உணர்ச்சிகள் எழுச்சி பெறுகின்றன. குழந்தைப் பருவ எண்ணம் வேறு. செயல் வேறு. கற்பனை வேறு கடமை வேறு. இளமைக் காலத்திலோ எண்ணம், செயல், கடமை. பொறுப்பு எல்லாமே மாறுபடுகின்றது. வாலிபரின் உடலில் ஏற்பட்ட புதிய மாற்றங்கள் போலவே, உள்ளத்திலே புதுமையான எண்ணங்கள். எதிர் பாராத நிலையில், எதிர்பார்க்காத புதிய உணர்ச்சிகள். இதற்கிடையிலே சமூகச் சூழ்நிலையின் சடுகுடுப் போராட் டங்கள். பட்டிக்காட்டுப் பையன் பட்டணத்து வீதிகளில் பதட்டத்துடன் பரபரத்து நடப்பதுபோல, பாதை தெரி யாமல் பரிதவிக்கிருன். குழந்தையாயிருந்த பொழுது அவன் நெஞ்சத்திலே குடியேறிக்கொண்டு பெரியவன் ஆல்ை இப்படி இருப்பேன் அப்படி நடப்பேன்’ என்பன போன்ற ஆசைகள், பெரியவ னை அவன் மனதிலே பேரலைகள் வீசும் பொழுது, சுற்றுப் புற சூழ்நிலையின் சூட்சுமம் புரியாமல் திகைக்கிருன். திணறு கிருன். திண்டாடித் தவிக்கிருன். தேறும் நிலை புரியாமல் தேம்பித் திரிகிருன்.