பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

~

வயது ஏற்றமும், வாலிபத் தோற்றமும், மனதில் இளைஞர்களுக்குத் தீராத வேதனையாக, திணறடிக்கும் சோதனையாகவே மாறுகின்றன. சிறுவர்களாக இருந்த பொழுது அவர்கள் தங்கள் குடும்பத்திற்கும் ஆசிரியர் களுக்கும். மற்றும் பேரியவர்களுக்கும் ஒரு பிரச்சினையாக இருந்தே வளர்ந்தவர்கள். ஆனல் வளர்ந்த பிறகோ, தானே ஒரு பிரச்சினையாக இருப்பதைத் தான் அவர்களால் உணர மூடிகின்றது. இதனுல்தான் மேல் நாட்டறிஞர் ஒருவர் கூறினர் போலும் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு பிரச்சினை தான்’ என்று. தசைகளின் வளர்ச்சி, எலும்புகளின் வலிமை, இரத்த ஓட்டத் ை விளைவிக்கும் இதயத்தின் திண்மை; நுரையீரல்களின் விரிவு, வாலிபத்தின்வலிமையை மிகுத்துக் காட்டுவனவாகும். அந்த ஆற்றல் பரம்பரையால் அல்லது உண்தை உணவுச் சத்தால், செய்யும் உடற் பயிற்சியால் மிகுதியாக வரலாம். என்ரு லும், அந்த ஆற்றல் இளமைக் காலத்தில் இன்னும் சற்று விரிவும் வலிவும் அடைகின்றது. குழந்தைப் பருவத்தில் கூடி விளையாடிய குணம் , சேர்ந்து திரிந்த பண்பு எல்லாம். இளமைக் காலத்தே சற்றே ஒதுங்கிக் கொள்கிறது. தன் இன நண்பர்களை வெறுக்கத் தூண்டுகிறது. எதிர் பால் இனத்திடம் பழ (Sex) எதிர் பார்த்து ஏங்குகிறது. அந்த எதிர்பார்ப்பால் ஏக்கத்தால், அவன் சில நேரங்களில் சுறுசுறுப்பாகவும் மந் தணுகவும், தன் னம்பிக்கையுள்ளவனுகவும், தன்னம்பிக்கையற்றவனுகவும், புத்திசாலியாகவும், தற்குறியாகவும்; கடவுள் பக்தி உள்ளவளுகவும், கடவுளை வெறுப்பவளுகவும் மாறி மாறித் தோன்று கிருன். உள்ளத்தின் வளர்ச்சி பண்படுகிற பொழுது தான் செய்வது தவறென்றும், பண்ட டாத பொழுது எல்லாமே சரியென்றும் ஏற்றுக் கொண்டு, பின்னரே தெளிவினை அடை கிருன்.