பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. ஆடுகளம் அழைக்கிறது:

  • உலக மகா சாம்ராஜ்யத்தை அமைத்து, அதன் ஒப்பற்ற சக்ரவர்த்தியாகத் திகழ்வேன்' என்று நப்பாசை கொண்டு, திட்டமிட்டுப் படை திரட்டி,நாடுகளையெல்லாம் ஜெயித்து வந்த நெப்போலியன், வாட்டர்லூ எனுமிடத் தில் நடந்த போரில் நெல்சன் என்பவரிடம் தோற்றுப் போளுன்,

அந்தப் போரே அவனது கனவுகளே அழித்தப் போராக, பேராசையைப் பொசுக்கிய போராக அமைந்து போனது, சூருவளியாக வந்த நெப்போலியனை தைரியமாகத் தாக்கி தன்னிகரில்லா வெற்றி பெற்ற விதத்தை நெல்சன் விவரித்தபோது, "வாட்டர்லூ டோர்க்களத்தில் பெற்ற வெற்றி யானது ஈடன் நகரத்தில் இருந்த ஆடுகளங்களிளுல் பெற்ற அனுபவங்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்’ என்று பெருமை பொங்கக் கூறினர். ஆடுகளங்களுக்கு அரியதோர் இடத்தை வழங்கி , அதனை கோயிலாகவும், ஆன்ற புகழ் வாய்ந்த சீர்மைகளின் வாயிலாகவும் கொண்டிருந்த காரணத்தால்தான், இங்கி லாந்து நாடு பல ஆட்டங்களின் பிறப்பிடமாகவும், வளர்ச்சி யின் தாயகமாகவும், பல விளையாட்டுகளுக்கு நாயகமாகவும் விளங்கி வருகிறது.