பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12 புதியன காண்பித்து, புதுமைகளைச் செய்யத் துர ன்டும் காரணத்தால் ஆடுகளத்தை புத்துலகச் சிற்பி என்று பெருமைபடப் புகழ் வோரும் உண்டு. தன் ன றைந்து சிரிக்கும் நேரமே வாழ்க்கையின் சுவை யான நேரமாகும், அ தகைய சுவையான, சுகமான நேரம் கிடைக்காமல் ஏங்கும் மக்களே உலகில் அதிகம். நிகழ்காலம் முள்ளாய் குத்தும்போது, நாகமாய் தீண்டும் போது, பயந்து கொண்டு கடந்த காலத்தில் நடந்த இனிய நிகழ்ச்சிகளை நோக்கி ஓடுகிருேம். கடந்த காலத்தில் அப்படி எதுவும் இல்லை என்ருல், எதிர்காலத்தை நோக்கி கற்பனையுடன் ஒடுகிருேம். இனிய நினைவை. இனிய சூழ் நிலையை அனுபவிக்கவே எல்லோரும் விரும்புகிருேம். அந்த இனிய நினைவை, அது இறந்த காலமாகவும் இருக்கலாம், நிகழ்காலமாகவும் இருக்கலாம், அல்லது எதிர்காலமாகக் கூட இருக்கலாம். முன்காலத்திற்கும் சுவையூட்டும் இனிய நினைவை வழங்கும் இன்பக் கோயிலாகவும் ஆடுகளம் விளங்குகிறது, ஒவ்வொரு காரியத்தையும் ஆற்ற ஒவ்வொரு திறமை (Skill) வேண்டும். ஒவ்வொரு திறமையும் ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு நேரத்திற்கும் வேறு வேறு வித மாகப்பயன் டலாம். அதே திறமையை மற்ருெரு இடத்தில் துன்பம் உண்டாக்கவும் பயன்படுத்தலாம், திறமையான செயல்களேச் செய்யும் எண்ணத்தையும், கால நேரத் திற்கு ஏற்ருற்போல நல்லதோர் காரியமாற்றவும், வருகின்ற புதிய நிலையை சமாளிக்கின்ற சக்தியிே திறமைகளை வெளிக்கொணரவும், ஏற்கனவே இருக்கும் புதிய திறமைகளை மெருகேற்றிக் கொள்ளவும் கூடிய அரிய சக்தியை அளிக்கும் தொழிற்கூடமாகவும் ஆடுகளம் விளங்குகிறது.