பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 A. V. சட்டத்திற்கு மதிப்பும் மரியாதையும் தந்து புனிதப் படுத்துவது போலவே, விளையாட்டு விதிகளுக்கும் ஆட்டக் காரர்கள் ஏற்று, தலை வணங்கி ஆடுகின்ற னர். விதிகளை ஏற் று, பின்பற்றி, உண்மையாக ஆடி விளை யாடுவதில் தான் இன்பம் இருக்கிறது. பயனும் இருக்கிறது. பாது காப்பும் இருக்கிறது. விதிகள் தான் விளையாட்டிற்கு சிறப்பையும் விறு விறுப்பையும் உண்டுபண்ணுகின்றன. விதிகள்தான் வீரர்களுக்கு நல்ல பழக்கத்தையும். பண்பாட்டினையும் ஏற்படுத்துகின்றன. விதிகள்தான் கட்டுக்குள் அடங்கி ஆடி, உண்மைக்கும் உயர்வுக்கும் பாடுபடும் உணர்வைத் தூண்டுகின்றன. எனவே தான் நாட்டை நடத்தும் சட்ட திட்டங்கள் போலவே, ஆடுகளத் தின் விதிகளும் ஆடுவோரை ஆட்படுத்தி, அமைதியைக் காத்து, ஆனந்த சூழ்நிலையையும் அற்புத உலகத்தையும் படைத்து விடுகிறது. எனவே ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையாக் ஆடும் விளையாட்டு வீரனே, உண்மையான குடிமகனக வாழ்கிருண். உண்மையான குடிமகனை உருவாக கும் அற்புதத்தைத்தான் ஆடுகளம் செய்கிறது. தொடர்ந்து செய்து கொண்டும் வருகிறது. 2. திடமும் தெளிவும் வாழ்க்கையென்பது ஒரு சிக்கலான முடிச்சைப் போன்றது. அதை அவிழ்க்க நினைக்கும்பொழுது அல்லது முயலும்பொழுதே சிக்கலும் தோன்றிவிடும். முயல முயல, எதிர்பாராத முடி வுகளும் விடிவுகளும் தோன்றும். சிக்கல்கள் தோன்றி ஞலும், பிரச்சினைகளை ப் பெரிதுபடுத்திக் கொள்ள அதிலிருந்து விடுபட்டு வெளிவரும் திடமும் தெளிவும் மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் வேண்டும்.