பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123


அந்த நில, ஆடுகளத்திலே நமது கடமையைப் போலவே தொடங்குகிறது. ஆடுகளத்தில் இறங்கி, என்று நாம் ஆடத் தொடங்குகின்ருேமோ. அப்பொழுதே நாம் ஒரு முடிவுக்கு யட்பட்டு ஆகவே வேண்டும். ஆட்பட்டு ஆகத்தான் வேண்டும். அந்த முடிவானது, இருவரில் ஒருவர் வெற்றி பெற்றே யாக வேண்டும் இருவரும். வெற்றி பெறவும் முடியாது, சில சமயங்களில் சமம் (Tie) என்று சம அந்தஸ்தைப் பெற்று விடுகின்ற சூழ்நிலை அமைவதுண்டு. ஆனல் இருவரில் ஒருவர் நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். இருவரும் வெற்றி கொள்ள முடியாது, இருவீர் வேறல் இயற்கையுமன்று என்று புறநானூற்றுப் பாடல் வரியொன்று மிக அழகாகவே குறிப்பிட்டுச் யெல்கிறது . இருவர் வெல்லுதல் என்பது இயற்கையில்லை. ஆகவே, போட்டியிடுபவர்களில் ஒருவர் வென்ருக வேண்டும். ஒருவர் தோற்ருக வேண்டும், அதுதான் இயற்கையான முறை. இயற்கையான மரபுங்கூட. - இயற்கையான முடிவை நாம் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். வெற்றி என்ருல் வீரநடை, உற்சாகப்பேச்சு, ஓங்காரச் சிரிப்பு, எதிரியைப் பார்த்து ஏளனப்புன்னகை, தோல்வி யென்ருல் சேர்ந்த நடை. தொங்கிய தலை. தாழ்ந்த பார்வை. சரிந்த தோள்கள் கலங்கிய கண்கள்! கணக்கில்லா கற்பனைக் கவலைகள். ஏன் அப்படி! தோல்வி ஒன்றும் அவமானம் தரக்கூடியது அல்ல. போட்டியில் ஏற்படுகின்றதோல்விகளும் நிலையானது அல்ல. சுற்றிவரும் காற்ருடி போல் மாறக் கூடிய ஒன்று.