பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124


துடிக்கச் செய்யும் தோல்விகளும், சில நேரங்களில் வெற்றிப் பாதைக்கு நேராக அழைத்துச் செல்லும் வழி காட்டிகளாகவும் அமைவதுண்டு. சிரமமான பாதையினை மாற்றி, ஜில் லென்று வெற்றி முனையை அடைய வழி வகுக்கும் அறிவுப்பாதைகளாக ஆவதும் உண்டு. அந்தத் தோல்விகளே நாமே ஆச்சரியப்படும் படியாக, நிலையான வெற்றியை அளித்து விடுவதும் உண்டு. ஆகவே, தோல்வியைப் பற்றி நாம் எண்ணிப்பார்க்க வேண்டுமே தவிர கவலைபடக் கூடாது. நாம் தோல்வி பெற்றிருக்கிருேம் என்ருல், அந்தத் தோல்வியானது நாம் செய்த தவற்றுக்குரிய தண்டனை . நம்மையறியாமலே நாம் செய்து விட்ட தவறுக்கு அது நேர்ந்து விட்டது என்பதே பொருளாகும். அத்தகைய தவறு நமது தெளிவின்மையைக் காட்டு வனவாக இருக்கலாம். தேர்ச்சியின்மையைக் கூறுவனவாக இருக்கலாம்.திறமை இன்மையை விளக்குவதாக இருக்கலாம், எதிரியுடன் போரிடுகின்ற பலமின்மையைப் படம் பிடித்துக் காட்டுவதாகக் கூட அமைந்திருக்கலாம். திறமையும் தேர்ச்சியும் இருந்தாலும், சுறுசுறுப்பாக அதனைப் பயன்படுத்தாது. சோம்பலுடன் செயல்பட்டிக் கலாம். அல்லது செய்து விடுவோம், நம்மை மிஞ்ச யார் இருக்கிருர்கள் என்ற அசட்டுத் தைரியத்தில் ஆழ்ந்து, போயிருக்கலாம். அல்லது அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையில்ை விளைந்த, தற்பெருமையின் தலைகீழ் விளைவாகக் கூட இருக்கலாம். அல்லது உடலும் மனமும் ஒரு சேர பணியாற்ருத பதநிலை" இழந்த நிலையிலும் செயல்பட்டிருக்கலாம். -