பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125


இவையெல்லாம் தோல்வியைத்தருகின்ற ஒரு சில காரணங்களாகும். காரணங்களைத் தெரிந்து கொண்டு விட்டால் காரியம் எளிதாக நடந்து விடும். அதுபோலவே, தவறுகளைத் திருத்திக் கொண்டு விட்டால் முடிவுகளும் மாறித்தானே ஆகவேண்டும்! இன்ன காரணத்தால் தவறு செய்து விட்டோம். இப்படி செய்திருந்தால் தவறு நேர்ந்திருக் காது. இப்படிப்பட்ட தவறே நம்மை தோல்வி மேடையில் துக்கிப் போட்டிருக்கிறது என்று எண்ணித் தெளிந்து விட்டால், அடுத்த முறை ஏன் தோல்வி வரும்: • அதல்ை தான் தோல்வியே வெற்றிக்கு முதல்படி’ என்ருர்கள். தோல்வியை அலசி ஆராயும் மனப்பாங்கு உள்ளவர்களே முதல் படி என்று கூறிக் கொள்ள முடியும். தலை குனிந்து ஓடி ஒளிந்து கொள்பவர்களால், நிச்சயம் வெற்றிப்படி யை மிதிக்கக் கூட முடியாது. கோழை மனம் கொண்டவர்களால் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியவே முடியாது. கொள்கை மனம் கொண்டவர்களால் தான் தாங்கிக் கொள்ள முடியும். அதற்குத்தான் எதையும் தாங்கும் இதயம் வேண்டும். என்று கூறிச் சென்ருர்கள். தோல்வியை வெற்றியின்படி என்கிருேம்.இன்னும் சிலர் தோல்வியே வெற்றிச் செடியின் உரம் என்று கூறுகின்ருர் கள். வளம்தரும் உரமாக,தோல்வி அனுபவத்தின் சாரங்கள் அமையவேண்டும். இன்னும் ஒரு முறை தோல்விக்குரிய காரணத்தை ஆராய்வோம். இந்த அடிப்படையில்தான் தோல்வியின் தன்மையை ஆராய்ந்து அலசிப்பார்க்க வேண்டும் என்ப தாலே. மீண்டும் ஒரு முறை காரணங்களை நினைவுக்குக் கொண்டு வருவோம். --