பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129


தோல்வி மனப்பான்மையைத் தவிர்ப்போம். அறியாமையும் அதனைத் தொடர்ந்து வரும் புரியா பணிகளை யும் தகர்ப் போம். அனுபவங்களை முன் நிறுத்தி அறிவுப் பாதை அமைப்போம். வெற்றியைச் குவிப்போம். அந்த அற்புதப் படைப்புக்களைத் தான் ஆடுகளம் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறது. 4. வெற்றியும் வெறியும் தோற்றவர்கள் அனைவரும் மக்கு அதிர்ஷ்டம் இல்லை. நமது தலைவி தி அப்படி இருக்கிறது! என்ன செய்வது” என்று அங்கலாய்த்துக் கொள்வது உண்டு. வெற்றி பெற்று விட்டால், அவர்கள் பேசுகின்ற விதமும், மேற்கொள்ளுந் தோரணையும் ஒரு மாதிரியாகவே அமையும், "இந்த வெற்றி என்னுல் வந்தது, எனது முயற்சியால் விளைந்தது' என்று கூறிப் பெருமைப்படுபவர்களையும் நாம் பார்த்திருக்கிருேம். அவ்வாறு பேசுவது பெருமையிலிருந்து தற்பெருமைக்குக் கூட்டிச் சென்று விடும். அது தலைக் கனத்தை உண்டாக்கி விடும். பிறகு, தாறுமாருகப் பேசும் போக்கைக் கொடுத்து வி டும் அதுவே அவரது தாழ்வுக்கு நடைபாய் விரித்தது போலவும் வைத்து விடும். வெற்றியிலே மகிழ்ச்சி _ இருக்கலாம். பெருமை வரலாம். ஆனல், அதில் பகட்டும் படாடோ மும், பிறர் முகஞ்சுளிக்கும் வண்ணம் பறையடிக்கின்ற தற்பெருமை நிலையும் வந்து விடக்கூடாது. ஆடுகளம் அன்ருடம் பிறருக்கு ஊட்டுகின்ற அற்புத பாடமாகவே வெற்றி” என்பது அமைந்திருக்கிறது. ‘இன்று நடைபெற்ற போட்டியில் பெற்ற வெற்றியைக் கண்டு இறுமாந்து இருந்தாயானல், நாளே நடக்கும் போட்டியில் நிச்சயம் வெற்றி பெற முடியாது.