பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போட்டி ஒன்று நடக்கிறது என்ருல், அதிலே பல குழுக்களை அல்லது பல வீரர்களை வென்று தான் வெற்றி பெற வேண்டும். ஒருவரை அல்லது ஒரு குழுவை வென்றவுடன், நான் தான் வெற்றி வீரன்’ என்று ஆரவரித்தால், அவனது அல்லது அந்தக் குழுவின் எதிர்காலம் அவ்வளவு ஏற்றமாய் இருக்காது. - வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. ஆகவே, சுற்றிச் சுற்றி வரும் கால நிலபோல, மாறி மாறி வரும் மனே நிலைக்கேற்ப, தேகநிலைக்கேற்ப நடைபெறும் காரியங் களில் தன்மையுடன் ஈடுபடவேண்டும், அதுவே இறுதி வெற்றியை எளிதாக அளிக்கும். ஆடுகளமானது எப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக் கும் ஆட்டக்காரர்களைத் தன் ைகத்தே கொண்டதாகும். சான்றுக்கு ஒன்றை எடுத்துக்கொள்வோம். கால்பந்தாட்டத் தில் குழுவிற்கு 11 பேர் என்று 22 பேர்கள் இருந்து, .ஏறத்தாழ 1 மணி நேரம் ஆடுகின்ருர்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் யாருக்கு என்ன நேரும், எப்படி எது நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. உலகத்தில் நடைபெறும் புதிர் போலத் தான், ஆடுகளத் திலும் இருக்கிறது. முடிவு நேரம் வரை ஆடவேண்டியது அவர்கள் கடமை. முடிவின் நிலை பற்றி அவர்கள் கவலை கொள்வதில்லை. அது எப்படியும் தெரியத்தான் போகிற தல்லவா! வாழ்க்கையின் பிரதி பலிப்பு தானே விளையாட்டும். கடமையை செய்வது மனிதன் கடமை. அதற்குரிய பலனைக் கொடுப்பது இறைவன் கடமை என்பது போல, விளையாட வேண்டியது வீரர்களின் கடமை.