பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 37 அவரவர் உழைப்புக்கேற்ப ஊதியம் கிடைக்கிறது. அவரவர் கடமைக்கு ஏற்ப இடம் கொடுக்கிறது. அவரவர் செயலுக்கு ஏற்ப திடம் கிடைக்கிறது. திறமை மிகுதி யாகிறது. அவரவர் நினைவுக்கேற்பவே களிப்பும் கெளரவ மும் கிடைக்கிறது. இவ்வாறு தனி மனிதனை தகுதியுள்ள மனிதகை, தன்மானமும் தன்னம்பிக்கையும் நிறைந்த வீரகை, தடைகள் பல வந்தாலும் தடுமாறிப் போகாமல், தகுந்த வழிகளில் குறிக்கோளை அடைந்திடும் திறம்மிகுந்த தீரகை, வீட்டிற்குப் பயன் கொடுக்கும் விவேகமுள்ள மகளுக, நாட்டிற்கு நல்ல பல தொண்டாற்றும் நாணயமுள்ள குடி மகனக உருவாக்கும் உன்னதமான அற்புதப் பணியைத் தான், ஆடுகளம் செய்து கொண்டு வருகிறது. ஆடுகளம் எப்பொழுதும் நல வாழ்வு நாடுபவர்கள் நாடுங் களமாக, நல்லவைகள் கூடும் களமாகவே விளங்கி வருகிறது. புனித நதியில் கால்பட்டவடன் பாவங்கள் பறந்தோடிப் போகின்றன என்பார்கள் வைதீகமார்க்கத் தார். அதுபோலவே, ஆடுகளத்தில் கால்பட்ட வுடன், *தான்’ எனும் தற்போதம் தரைமட்டமாகி விடவேண்டும் என்று விளையாட்டுத்துறை வல்லுநர்கள் விரும்பு கின்ருர்கள். - நல்ல நோக்கத்துடன் ஆடுகளம் நோக்கி வருபவர், இத்தகைய நற்பண்பினை நிறையவே பெற்றுக் கொள்கின் ருர்கள், இதுபோன்ற நற்பண்புகள் ஒருவர் பெறவில்லை. யாயின் அது ஆடுகளத்தின் குற்றமல்ல. எந்தப் பொருளின் சிறப்பும் பயன்படுத்துபவரின் பண்பையும் அறிவையும் பொறுத்தே அமையும் ஆடுகளத்தின் அருமையும் பயன்படுத்து வாரின் பண்பினைப் பொறுத்தே அமைந்திருக்கிறது. 9