பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Hi 5 čő வாழ்க்கையின் ஒத்திகை மன்றமாக ஆடுகளம் அமைந் திருக்கிறது. நாடகம் நடப்பதற்கு முன்னதாக பயிற்சிக்கு உதவும் இடமாக ஒத்திகை அறை உதவுகிறது அதைத்தான் அறையில் ஆடி அம்பலத்திற்கு வரவேண்டும் என்ற பழமொழியால் பேசுவார்கள், சிறப்பாக ஒத்திகைப் பார்த்தவர்கள்தான், சிறப்பாக நடிக்க முடியும், அதுபோலவே, வாழ்க்கை மேடையில் சிறப்பாக நடிக்க, வாழ்க்கைப் பயணத்திலே செழிப்பாக நடக்க, வாழ்க்கைப் பந்தயத்திலே சிறப்பாக பங்கு பெற்று முடிக்க ஆடுகளம் உதவுகிறது. விளயாட்டுக்கள் உதவு கின்றன. மேடையில் சிறப்பாக நடிக்க, பயணத்தில் செழிப் பாகத் தொடர, பந்தயத்தில் திறமையுடன் வெற்றி பெற, எவ்வாறெல்லாம் விளையாட்டுக்கள் உதவுகின்றன என்று அறியும் பொழுது, விளையாட்டும் வாழ்க்கையும் தனித்தனி அல்ல. ஒன்ருெடொன்று உறவு கொண்டதுதான் என்கின்ற பெருமையும் நமக்குப் புரிகிறது.