பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146


தன்மையுள்ளவர்கள் தங்கள் தவறை அறிகின்ருர்கள். தவறு செய்ததற்காக வெட்கப்படாமல், இனிமேல் இது போன்ற பிழைகளை மீண்டும் செய்யாமல் இருக்க முனை கின்ருர்கள். பந்தயத்தில் கலந்து கொள்பவர் இதுபோன்ற தன்னிலை விளக்கத்தையும், சுய சோதனை முறையையும் எளிதாகக் கற்றுக் கொள்கிரு.ர். வாய்ப்பினைப் பயன்படுத்துதல் வாய்ப்பு எப்பொழுதும் கிடைத்து விடுவதல்ல. அதுபோலவே, கிடைக்கின்ற வாய்ப்புக்களையும் ஏனே. தானே என்று கோட்டை விடுவதும் நல்லது மல்ல, போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கிறதென்ருல், அதனை பயன் உள்ள முறையில், பழுதாகிப் போகாமல், முடிந்த வரை வெற்றி பெற வேண்டும் என்ற முழுமூச்சுடன் போராடிப் பார்த்து விட வேண்டும். அதற்காகவே, பந்தய வாய்ப்புக்கள் அடிக்கடி வருகின்றன. இந்த வாய்ப்பில் இல்லாது போன திறமையை அறிந்து, வருகிற வாய்ப்பில் வளமாகச் செய்துவிட வேண்டும். அதுவே பகுத் தறிவாளர்க்குரிய இலட்சண மாகும். ஒட்டப்பந்தயத்தில் பங்கு பெறுபவர், வாய்ப்புக்களில் எல்லாம் தன் திறமையையும் பிறர் திறமையையும் அறிந்து, பக்குவமாக அதற்கேற்ப செயல்படுவதால் தான். அவரால் பந்தயத்தில் முன்னேற்றம் பெற முடிகிறது. விதிகளுக்கு அடங்குதல் என்னதான் ஒருவர் உலக வெற்றி வீரராக இருந் தாலும், அவர் பந்தயத்திற்குரிய விதிகளுக்கு அடங்கித்