பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13


செய்வதைத் திருந்தச் செய்ய முயல்பவருக்கு செயல் இயற்கையாக அமையும். செயலில் தெளிவு கிடைக்கும். சிந்தையில் துணிவும், நிலைமையை சமாளிக்கின்ற சாமர்த் தியமும் தன்னலே தொடர்ந்து வரும். குருட்டுத்தனமாக, எதற்கும் பயப்படுகின்ற கோழை, வாழ்க்கையில் என்றுமே முன்னேற முடியாது. குறிக்கோளை அடையவும் இயலாது. கோழை நொடிக்கொருதரம் செத்து செத்துப் பிழைக்கிருன். அவர்கள் தாங்களாகவே தங்கள் வாழ்க்கையைப் பிரச்சினை மிகுந்ததாக ஆக்கிக்கொண்டு, சீரான நூல்கண்டை சிக்கலாக்கி அவதிப்படுபவராகவே வாழ்கின்ருர்கள், உழைப்பே உறுதுணை சிறந்த இசைக் கருவி வல்லுநன் ஒருவன் இருக்கிருன். அவன் இசைக் கருவியில் எழுப்புகின்ற ஒசையும் இசையும், கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. அது அவனது பயிற்சிக்குக் கிடைத்த பரிசு. உழைப்பிற்குக் கிடைத்த வெகுமதி. அதல்ை அவன் புகழ் பெறுகிருன். பூரிப்படை கிருன். புவியில் பிறந்த பேற்றின. அடைகிருன். பண்படாத, பயிற்சி செய்யாத ஒருவன் இசைக் கருவியை வாசிக்கும்போது, இன்பத்திற்குப் பதிலாக எரிச்சல். வாழ்த்துக்குப் பதிலாக கேலிக் கூச்சல். அவன் புகழ்பெற வந்து, பரிகாசத்திற்கு ஆளாகிருன். வாழ்க்கையும் ஒவ்வொரு மனிதனுக்கும் இப்படித்தான் சிறந்த வாய்ப்பினை அளிக்கின்றது. இசையறிந்த கலைஞன் புகழ் பெறுவது போல, அறிவுள்ள தரமுள்ள மனிதன் ஆனந்தமாக வாழ்கிருன். அரைகுறைக் கலைஞன் அவதியுறு வது போல வே, முயற்சி செய்யாத. உழைக்காத மற்றவர்கள் வாழ்கின்ருர்கள். வருந்துகின்ருர்கள்.