பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 49 வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்படாது, என் கடன் காரியம் ஆற்றுதல் என்கிற உணர்வுடன், கடைசி வரை ஒரு கை பார்த்து விடுகிறேன் என்ற விடாமுயற்சி யுடன் செயல் ஆற்றுகின்ற பண்பு. ஒரு நேரத்தில் பல காரியங்கள் செய்து, எல்லாம் பாதியிலே நின்று போய், பலன் தராமல் போய் விடுகின்ற நிலையில்லாமல், ஒன்றே செய்வோம், நன்றே செய்வோம். என்கிற முறையில் ஒரு மனப்பட்டு செயலாற்றும் பண்பு. நாட்டின் சட்ட திட்டத்திற்கு அடங்கி, நல்லன. போற்றி, மேலோரை மதித்து, மாற்ருரையும் கெளரவித்து. வாழ்கின்ற பண்பு எல்லாம். விளையாட்டரங்கில் முகிழ்க்கின்றன. அவைகள் வாழ்க்கை அரங்கிலே மின்னி ஒளிர்கின்றன. வாழ்க்கைப் பந்தயம் வெற்றிகரமாக நிகழ பேரும் புகழுடன் திகழ, அமைதியும் ஆனந்த மும் உலவ, இப்பண்புகளே என்றும் துணையாக உதவுகின்றன. வாழ்க்கையையே பந்தயமாகக் கொண்ட மனிதர்கள் வாழ்க்கையில் அனுபவம் பெற முனைந்தால், அது கால விரயத்தில் தான் முடியும், அதையே விளையாட்டுப் பந்தயங்களில் பெற முயன்ருல் , குறுகிய காலத்திற்குள்ளே, பெருகிடும் திறமைகளே மேலும் மேலும் வளர்த்துப் பயனடைய முடியும். வாழ்க்கைப் பந்தயம் முடிவிலாப் பந்தயம் தான், அன்பு நெறிகளில் செல்ல ஆயத்தமாக இருப்போம். அடுத்தவர்க்கு ஆனந்தம் தருகின்ற உதவிகளைச் செய்ய திடமனத்தினராக வாழ்வோம். பிறவியின் பெருமை