பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18


எண்ணித் துணிகிற மனிதன் இவைகளுக்கு ஏற்ப ஈடு கொடுக்கிருன். அவனது எண்ணங்களே அவனை செயல் படுத்துவதால்தான், எண்ணம் போலவே வாழ்க்கை அமை கிறது என்று முன்னேர்கள் கூறிவந்தனர். எண்ணங்கள் எதற்காக என்ருல், வாழ்க்கையை வழி நடத்திச் செல்லத்தான். எண்ணங்கள் வழி நடத்த வேண்டும் என்ருல், எங்கே என்று தெரிய வேண்டாமா? இலட்சியம் என்னவென்று புரிந்து கொள்ள வேண்டாமா? நாம் ஒரு பிரயாணத்தை மேற்கொள்கிருேம் என்ருல், போகும் இடம் என்ன?போய் வர வாகன வசதி என்ன? பயணத்திற்கு ஏற்ற வசதி என்ன என்று முன் கூட்டியே திட்டம் போடுகிருேமே, அதுதான் பயணத்திற்குரிய குறிக்கோளாகும். அந்த வழிநடைப் பயணம் போல்தான், வாழ்க்கைப் பயணமும் அமைகிறது. குறிக்கோள் இல்லாத மனிதனுக் கும், கொம்பேறித் தாவும் குரங்குக்கும் என்ன பேதம் இருக்க முடியும்? கடலிலே கப்பலை செலுத்துகின்ற மாலுமி, தான் சேர வேண்டிய இடத்தை முன்னரே நிர்ணயித்துக் கொண்டு. அந்தத் திசை நோக்கியேதான் கலத்தைச் செலுத்துவான். உலகம் எனும் கடலில், ஒவ்வொரு மனிதனும், மாலுமி யாகத்தான் தன் வாழ்க்கையைத் தொடங்குகிருன், ஏரியில் படகு விடும் குழந்தையாக, ஆற்றில் கலம் செலுத்தும் இளைஞனாக, கடலில் கப்பல் விடும் தலைவகை ஒவ்வொரு வனும் மாறுகிருன், மாலுமியின் நோக்கம், கலத்தைப் பத்திரமாகக் கரை சேர்க்க வேண்டும் என்பதுதான். பாறைகளில் மோதாமல், பாய்ந்து சாடும் சுரு மீன்கள் தாக்காமல், பத்திரமாகப் போகும் இடம் போய்ச் சேர