பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20


யடைந்து தெளிவுற்ற ஒரு உயர்ந்த நிலை தான் மகிழ்ச்சி என்பதாகும். ஆனந்தம் (Pleasure) என்பதும் ஒரு இனிய நிலையே. அது தொடர்ந்து மனதிலே தங்கியிருக்காத ஒரு நிலை. துப்பறியும் கதை, காதல் கதைகள் போன்ற புத்தகங்களைப் படிப்பதிலும், சினிமா நாடகம் போன்ற காட்சிகளைக் காண் பதிலும், நண்பர்களைக் கேலி செய்து உரையாடுவதிலும், உண்ணல், உறங்கல், மதுபானம் அருந்தல் முதலிய செயல் களில் உண்டாகும் ஒரு மயக்கமான இனிய நிலை. மேலே கூறிய செயல்களால் தோன்றும் இனிய நிலை நிலையானதல்ல. அந்த ஆனந்தம் குறைந்த நேரத்திலேயே மறைந்து போகலாம். அதே ஆனந்தம் சில சமயங்களில் துன்பத்தைத் தரலாம். அல்லது பல நாள் கழித்துப் பெருந்தீங்கினையும் விளைவிக்கலாம், ஆகவே, ஆனந்தம் என்பது வேறு. மகிழ்ச்சி என்பது வேறு. என்பதை நாம் முதலில் உணர்ந்து கொள்வது நல்ல தாகவே அமையும். மகிழ்ச்சி என்பது நிலையான ஒன்று. வாழ்க்கையுடன் தொடர்ந்து நிழலாவது. ஒட்டி உறவாடுவது. கற்பனைக்கும் எட்டாத இந்திரலோகத்தில் தான் இன்பம் உண்டு என்னும் கருத்தை மாற்றி, இந்த உலகத்திலே, நீ வாழ்கின்ற இடத் திலே, உன்னுடைய சுற்றுப் புறத்திலே, உன்னுடைய உள்ளத்திலே தான் இருக்கிறது என்று ஒர் அரிய வழியைக் காட்டி மீட்டுவதுதான் மகிழ்ச்சியாகும். அர்னல்டு பெனட் எனும் அறிஞர் கூறுகிரு.ர். மகிழ்ச்சி என்பது உண்மையான முயற்சியின் விளைவாக ஏற்படுகின்ற திருப்தியே!”