பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22


உருவாக்கும் செயலை, உன்னத வடிவை, நினைந்து நினைந்து, அற்புதங்களை உணர்ந்து உணர்ந்து, உள்ளம் கசிந்து கசிந்து, இயற்கையின் அன்புப் பிடியிலே இதயம் தழுவ, நழுவ, நல்ல அறிவையும், நல்ல உடலையும் பெற்று மகிழ்வது ஒருவழி. ‘என்கடன் பணி செய்து கிடப்பதே என்று இரக்க மனத்தோடு இயன்ற அளவுக்குப் பிறருக்கு உழைத்துத் தொண்டாற்றி, அவர்களது ஆனந்தத்திலே தானும் பேரின்பம் காணுகின்றது மற்ருெரு வழி. அருள் நிறைந்த நெஞ்சம் காணும் அருவியெனும் மகிழ்ச்சியில்தான், வாழ்வின் குறிக்கோளே குவிந்து கிடக்கிறது கூடி வாழும் இனந்தான் மனித இனம், கோடி கோடியாய் பொருளைக் குவிப்பதைக் காட்டிலும், இருப்பதைத்தானும் அனுபவித்து, பிறருக்கும் தந்து மகிழ்வித்து வாழும் வாழ்க்கையையே குறிக்கோள் என்கிருேம். அதற்கு பண்பட்ட மனம் வேண்டுமே! எப்படிபெறுவது? விதை நல்லதாக இருந்தால் விளைவும் நல்லதாக இருக்கும். வழி நல்லதாக இருந்தால், வாழ்வும் நல்லதாக இருக்கும். அவ்வாறென்ருல். வாழ்க்கையின் வழிகள் தான் என்ன? அவைகளையும் இனி காண்போம்.