பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33


எண்ணற்ற அற்புதங்களை, எண்ணி எண்ணி மகிழக் கூடிய எழிலான அசைவுகளை, எப்படி இயங்குகிறது என்று ஆடாமல் அசையாமல், பார்த்துப் பார்த்துப் பரவசப்படச் செய்கின்ற பல்வேறுபட்ட உறுப்புக்களை தன்னகத்தே வைத்துக் கொண்டு, திறம்பட செயலாற்றும் ஒரு ஒப்பற்றத் தொழிற்சாலையாக நம் உடல் திகழ்கிறது. தானகவே இயங்கி, மற்ற உறுப்புக்களைக் காலம் பார்த்து, நேரம் பார்த்து, சேவை பார்த்து இயக்கச் செய்து காக்கின்ற நம் உடல் அற்புத சக்தியாக மிளிர்கின்றது. தேய்ந்து போகின்ற உறுப்புக்களைத் தானே சீர்படுத்தி, செழுமைப்படுத்தி, செப்பனிட்டுத் தெளிவாக ஆக்கும் சக்தியின் காமதேனுவாக நம் உடல் விளங்குகின்றது. தனக்குத் தேவையானதை தானே தயாரித்துக் கொண்டு, மேலும் வேண்டுமானல் வளர்த்துக் கொண்டு, வேண்டாதவற்றை நீக்கிக் கொண்டு, வளர்ச்சிக்கும் அளவு வைத்து, உணர்ச்சிக்கும் அலகு வைத்து. உயர்வோடு செயல்பட்டு வரும் செம்மை, மனித உடலின் வலிமை அல்லவா! நமது உடல் கட்டைகளாலும், கனமான இரும்பு களாலும் ஆக்கப்பட்டதல்ல. நுண்ணிய உயிரமைப்புக் களால், நூதனமாக பின்னப்பட்ட மென்மையிலும் தன்மை யிலுமே இயங்கிக் கொண்டிருக்கும் மேன்மைமிகு தேக மாகும். + - அத்தகைய அரிய அமைப்புக்களைப் பற்றி ஒரு சிறிது இங்கே காண்போம், - வெளியுலக நிகழ்ச்சிகளை புலன்களால் உடனுக்குடன் அறிந்தும், அதற்கேற்றபடி ஆணையை விடுத்து அறிவுறுத்தி