பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35


பின்னர் மிஞ்சியவற்றை எரு வாய்க்குத் (Rectum) தள்ளி விடும் சிறுகுடல்; பெருங்குடல். இவ்வாறு உடல் உறுப்புக்கள் ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருந்து செயல்படுகின்ற மனித தேக மானது, ஒர் ஒப்பற்ற படைப்பாக அல்லவா மிளிர்கின்றது! விலங்குகளும் இவ்வாறுதான் வாழ்கின்றன என்ருலும், சிந்தனை வளமும், சிரிக்கும் செயலும், பேசும் வளமும் நிமிர்ந்து செல்லும் பண்பும் நிறைந்த தல்லவா மனித வாழ்க்கை! அதற்கு ஆதாரமாக அல்லவா உடல் நின்று விளங்குகிறது! பரபரப்பு மிகுந்த பட்டணத்திலே அமையப்பேற்ற தந்தி அலுவலக அறையை நினைவு கூருங்கள். அதைவிட சதாகாலமும் பரபரப்பாக இயங்கும் ஆற்றலைப் பெற்றிருக் கிறது நமது உடல். - தந்தியில்லாக் கம்பி வழி செய்தி அனுப்பும் முறை போல, நரம்புகள் பல, பல்வேறு இணைப்புக்களுடன் பின்னப் பட்டு இன்று விஞ்ஞான உலகில் வடிவமைப்புப் பெற்ற மின்வழித் தந்தி அனுப்பும் அமைப்புக்களைவிட நூதனமாக, நுண்ணிய அளவிலே அருஞ்செயல் ஆற்றுகின்ற எந்திரமாக நமது உடல் அமைந்திருக்கிறது. உணர்வுகளை ஏற்றிச்செல்லும் நரம்புகள் கொண்டு வரும் செய்திகளின் அவசர நிலைமைக்கேற்ப விரைவாகவும். தேவையில்லேயென்ருல் நிதானமாகவும் செய்து, நிலையை சரி செய்து கொள்கின்ற சர்வசக்தியையும் நமது உடல் பெற்றிருக்கிறது. விலையுயர்ந்த மகிழ்வுந்தின் உறுப்புக்கள் எவ்வாறு ஒலி யெழுப்பாமலே இங்கிதமாக இயங்குகின்றனவோ, அவற்றை விட சொல்லொன சிறப்பால், உறுப்புக்களை நடத்தி ஒன்று: