பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36


படுத்தி, சிக்கல் இல்லா நிலையில் செயலாற்றித் திகழ்கிறது நமது உடல், o இயற்கையில் இல்லாமல் போனலும் அல்லது செயற் கையாக ஒர் உறுப்பு அகற்றப்பட்டாலும் கூட, பிறிதாக இருக்கின்ற மற்ருெரு உறுப்பு, அந்தப் பொறுப்பை ஏற்று அன்ருடப்பணிக்காக நின்று போகாமல் ஒழுங்காகச் செய்து காக்கின்ற பேற்றினையும் நமது உடல் பெற்றிருக்கிறது. எத்தனையோ நுணுக்கமான எந்திரங்களைப் படைத்த விஞ்ஞானிகள் கூட, நமது உடலைப்போன்று ஒர் ஒப்பற்ற கருவியை அமைக்க முடியாமல் திணறுகின்ருர்கள் என்கின்ற அதிசய நிலைமைதான் இன்றும் நீடித்து வருகிறது. இளமை வரும் வரை தானே வளர்வதும், வளமாவது மாக உச்சநிலை கொள்கிறது. ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்ததும் தனது வளர்ச்சியை நிறுத்திக் கொள்கிறது. நாம் நினைக்காத நேரத்தில் ஞானப்பல் (Wisdom Tooth) முளைத்து நம்மை நினைவுக்குள்ளாக்குகிறது. வியப்பில் ஆழ்த்துகிறது. இளமை, முதுமை என்ற கால நிலைகளுக் கேற்ப கடமையாற்றும் திறமையுடன் நமது உடல் செயல் படுகிறது. அனைத்துக்கும் ஆதாரமாக விளங்குகிறது. குளிர்காலத்தில் வெப்பப்படுத்திக் கொள்கிறது. வெப்ப காலத்தில் குளிர்படுத்திக் கொள்கின்றதல்லவா! அத்தகைய அரிய உடலை நாம் சிறிது நேரமாவது எண்ணிப்பார்த்து, என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து செயல்பட வேண்டாமா! உலகம் தானகவே இயங்குகிறது. கண்ணில் படா விட்டாலும் காலமெல்லாம் காற்று வீசிக்கொண்டிருக்கிறது, தண்ணிர் ஒடிக் கொண்டிருக்கிறது. தீ எரிகிறது.