பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37


காற்று தென்றலாகும் பொழுது சுகமாக இருக்கிறது. தண்ணீர் தாகத்தைத் தீர்க்கும் பொழுது திருப்தி ஏற்படு: கிறது. தீ தீபமாக மாறி எரியும்பொழுது இன்பம் பயக்கிறது. ஆல்ை, தென்றல் காற்று சீறும் புயலானல், தண்ணிர் தாக்குகின்ற வெள்ளமானல், தி பயங்கர நெருப்பானல், ஊரை அழிக்கின்ற கொடிய நிலைதானே உருவாகிறது! அதல்ை நாம் தீயையும், புனலையும், காற்றையும் தூர விலக்கி வைத்துவிடுவ்தில்லை. ஆனல் ஒன்றைமட்டும் நாம் இங்கே உணர்ந்து பார்க்க வேண்டும். ஒருபொருள் நிலைமைக்குக் கீழாகக்குறையும்பொழுதும்: தேவைக்கு மேலே மிகுதியாகும் பொழுதும் தீமையில் கொண்டுபோய்தான் முடித்து வைக்கிறது.உணவிலே உப்பு குறைந்தாலும், உப்புச்சுவை மிகுந்தாலும் உணவு சுவைப்ப தில்லை. உப்பு குறைந்த நிறைந்த பண்டம் குப்பையில் என்பது தானே பழமொழி: அதுபோலவே, உடலும் இருக்கிறது என்பதை நாம் மறக்கக்கூடாது. உடலுக்குரிய இயக்கம் எப்பொழுதும் நித்ாணமாக, சம்மாக சுமுகமாக இருக்கவேண்டும். உடல், இயக்கம் குறைந்தால் உடல் தளர்கிறது. நலிகிறது. உடலியக்கம் அதிகம்ால்ை உடல் அழிகிறது. பக்குவ உணவுப் பண்டம்போல, உடல் காக்கப்படல் வேண்டும். அளவான இயற்கையின் இயக்கம்போல உடல் இயக்கப் படல் வேண்டும். - ஒப்பற்ற هـاع இயந்திரத்தை பொன் போல பாது காத்து வாழ்வது தான், அறிவுள்ள மனிதனின் அன்ரு ட. கடமையாகும். ‘அரும்பு கோணிடில் அது மணம் குன்றுமோ கரும்பு கோணிடில் கட்டியும் பாகுமாம்! இரும்பு கோணிடில் டில்லி யானையை வெல்லலாம்! நரம்பு கோணிடில் நாமதற்கு என் செய்வோம்’ என்று பறைசாற்றிப் பாடுகிறது விவேக சிந்தாமணி.