பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41


நேர்வழிதான் நெறியான வழியாகும். சரியான முறையும் ஆகும். புதிதாக ஒரு வீட்டிற்குப் போகிறவன், வீட்டின் சுற்றுப் புறங்களையும் அறைகளையும், அவற்றின் அமைப்புக் களையும் பார்த்தபடிதான் மேல் மாடிக்குச் செல்ல முனை கிருன். அதைப் போலவே, வாழ்க்கையின் மேல் நிலைக்கும், புகழ் நிலைக்கும் வரத் துடிக்கிறவனும், இது போல் முதல் நிலையை ஆராய்ந்து அனுசரித்தே நடந்திட வேண்டும். படிப்படியாக ஏறினல் படிப்பினையும் தரமாக இருக்கும். பெறும் அனுபவமும் சுகமாகவும் நிறைவாகவும் இருக்கும். மீறில்ை வரும் இழப்பும் சிறிதாகவும் இருக்கும். அந்த வழி யானது மனதுக்கு அமைதியையும், தெளிவையும் தரும். உடலுக்கு சமநிலையையும் பலத்தையும் கொடுக்கும். எனவே, உடலின் தசை சக்தி நடைபோட, உள்ளத்தின் விசைச் சக்தி துணைசேர, வாழ்க்கையில் காரியங்கள் நடக் கின்றன, என்பதையே நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. உடல் புறவுலகில் இயங்குகிறது. உள்ளம் உள்ளுலகில் இயங்குகிறது. மனித உடலானது சுற்றுப்புறங்களுக்கும். சூழ்நிலைக்கும், சமுதாய அமைப்புக்கும் கட்டுப்பட்டே இயங்குகிறது. மனமோ கட்டுப்படாத நிலையில் விரிந்த வாளுேடும், பரந்த கடலோடும், கற்பனைக்கும் அப்பாலே கலந்தும் விளையாடுகிறது. எண்ணங்களை ஒரு புறம் இனிக்கச் செய்யும். வேண்டாத நினைவுகளே மறுபுறம் விரிவுபடுத்தும், துரிதப்படுத்தும், துயரப்படுத்தும். சில சமயங்களில், நெறியல்லாதவற்றிலும் நிலைப்படுத்தும். 3