பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45


மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன நினேட்டனர்கள்? ஏதாவது செய்தால் அவர்கள் பழிப்பார்களோ, இந்த ஆடையைப்பற்றி கேலி செய்வார்களோ? பேசினல் தவறு வருமோ! என்று எதற்கெடுத்தாலும் தன்னையும் தன் செயலேயும் முயற்சியையும் தாழ்வுபடுத்திக் கொண்டு தணிந்தும் குனிந்தும் எண்ணுகின்ற கற்பனை தாழ்வு மனப்பான்மை; காலம் ஒடிக் கொண்டிருக்கிறதே! நமக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறதே! கிழப்பருவம் வந்துவிட்டால் என்ன செய்வது? யார் நமக்கு உதவி செய்வார் என்று எதிர்காலம் பற்றிய கற்பனை வயோதிகக் கவலை; o இறப்பைப் பற்றி எப்பொழுதும் எண்ணத்திலே சுழ்ல் நாற்காலி போல சுற்றி வருகின்ற கற்பனை மரண பயம்; வாழ்க்கையில் உற்சாகம் இல்லையே, இன்பமே இல்லையே? எல்லாம் சப்பென்று இருக்கிறதே என்று தளர்ந்த நிலையில் தவித்திடச் செய்யும் கற்பனை வறுமை; அத்தகைய கற்பனைகளாலும் கருத்தோட்டங்களாலும் மனிதர்களே உணர்ச்சி பிழம்பாக்கி, உருக்கி, உருக்குலையச் செய்கின்ற உள்ளத்தை வெல்ல, உடலை நல்ல படி வைத்துக் கொண்டால்தான் முடியும். அதற்குத்தான் நல்ல உடலில் நல்ல மனம்’ என்று ஒரு பழமொழியையே உருவாக்கித் தந்திருக்கின்ருர்கள். இன்று உலகத்தில் சிலர் உண்மையாகவே நோய்வாய்ப் பட்டிருக்கின்ருர்கள். இன்னும் சிலர், தங்களே நோயாளி களாக அதாவது நோய்வாய்ப்பட்டிருப்பதாக எண்ணி மயங்குகின்ருர்கள். இன்னும் சிலர், தங்களைத் தாங்களே நோயாளிகளாக நாளுக்கு நாள் மாற்றிக்கொண்டே வருகின்றனர். எனவே, உள்ளம் என்பது உடலில் இருந்து - * =