பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46


கொண்டே விளையாடுகிறது. பலவீனமானவர்களுக்கு பலtாதிரியாக வேடிக்கைக் காட்டுகிறது. வேதனை கூட்டுகிறது. இல்லாத ஒன்றைக் கற்பனை செய்து கொண்டு ஏங்கி மயங்குவதும் மங்குவதும்தான் சராசரி மனித வாழ்க்கை யாகும். இன்றைய நாகரிக மனிதனுக்கு இது சர்வ சாதாரணமான ஒன்ருகப் பழகிப்போய்விட்டது. ஆமாம்! உதவாத கருத்துக்களையும் உருப்படாத கொள்கைகளையும் உள்ளத்தே நிரப்பி வைத்துக் கொண்டு. நடைமுறைக்குக் கொண்டு வரமுடியாமல் திணறுகிருன், திண்டாடுகிருன். திசை மாறிய பறவைபோல தியங்கியும் கலங்கியும் தேம்பித் திரீகிருன். உணர்ச்சிகளை மிகுதிப்படுத்திக் கொண்டு நலிகிருன். சிலசமயங்களில் தன் கொள்கை வெற்றியடையும்பொழுது, குறிக்கோளை நெருங்கும்பொழுது கும்மாளம் போடுகிருன். குதித்து ஆர்ப்பாட்டம் செய்கிருன் தோல்வி அடைந்து யோனுலோ, வாழ்க்கையே போய்விட்டது போல உணர் கிருன். எந்த முடிவுக்கும் தன்னை ஆளாக்கிக் கொள்ளும் கடைசி நிலைக்கும் போய் விடுகிருன். ஆக, ஒரு வெற்றியும் ஒரு தோல்வியும் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயித்துவிடுகின்ற நிகழ்ச்சிகள் அல்ல. அது ஒரு படிதான். அந்த படிப்பினேயின்மூலம் பகுத்தறிவு வெறுவதுதான் அறிவுடையோனுக்கு அழகு. அதற்கு முதல் படியானது, உள்ளத்தை நம் வசம் கொண்டு வந்து விடுவது தான். எப்படி? உடலும் உள்ளமும் இரண்டறக் கலந்த ஒன்று. என்ருலும், ஒன்று ஒன்ருக இருந்து செயல்படுகிறது. ஒன்று வளர்த்து ஒன்று மங்கிப் போவது உரிய வளர்ச்சியல்ல. ஒரு