பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50


பொழுது, இருகரைகளான உடலும் உள்ளமும் திறமானதாக இருந்தால் தான் முடியும். ஒரு கரை சரியாக இருந்து, மறுகரை சரிந்து கிடந்தால், நீரும் வயலுக்கு ஏருது, முயற்சியும் பலிக்காது. ஆகவே, உள்ளம் உறுதியாக வளர உடல் நலம் அவசியம். முகத்துக்கு இரு கண்கள்போல, வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தேவை. உடலும் உள்ளமும் வாழ்க்கையை தெளிவாகக் காட்டுகிறது. கண்ணிழந்த குருடனுக்கு உலகம் மையிருட்டு. உடலும் உள்ளமும் தரமிழந்த மனிதனுக்கு, உலகமும் துயர இருட்டாகத் தான்.தெரியும். அனலும் மணலும் நிறைந்த பாலையாகத் தான் தோன்றும், ஆகவே, ஒப்பற்ற இரட்டைப் பிறவி யான உடலையும் உள்ளத்தையும் வலிவும் பொலிவும் பெற நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வதுடன், ஆக்கப்பணி களையும் செய்து, அருமையான வாழ்வை வாழ்வோம்.