பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52


அதே தன்மையில் தான் ஆதிமனிதன் வாழ்ந்தான். எண்ணம் இருந்தது. அதில் தெளிவு இல்லை, பார்வை இருந்தது. அதில் பக்குவம் இல்லை. வாழ்க்கை இருந்தது. அது வகையாக அமையவில்லை. இயற்கையோடே ஆதி மனிதன் வாழ்ந்தான். இருந் தான். இயற்கையன்னையின் அன்பு மடியிலே தவழ்ந்தான். இன்பமூட்டும் மரநிழலிலே உறங்கினன். கைக்கெட்டும் காய்கனிகளைப் பறித்து உண்டான். பசியெழுந்தால் தேடினன். எதிரில் இருப்பதை நாடினன். மேவின்ை. கானகத்து கொடிய விலங்குகள், ஊர்வனவற்றின் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற விரும்பினன். காலம் மாறிவந்தது. கவனமும் திசைதிரும்பியது. பாதுகாப்புக்குக் காலம் பக்குவப்படுத்தியது. வேகவைத்த வெப்பமும், கொடுமையான குளிரும். மழையும், அவர்களுக்கு மறை விடம் தேடக் கற்றுத்தந்தன. மரப் பொந்துகளும், குகை களும் அவர்களை வாஎன்று வரவேற்றன, வாழ்வளித்தன. தேவை ஆதிமனிதர்களுக்குத் தெளிவைக் கொடுத்தது. அப்பொழுது ஆரம்பித்த தேவை மனித இனத்திற்குக் குறையவே இல்லை. கூடிக் கொண்டே வந்தது, வருகிறது, கோடிக்கணக்கில் தொடர்கிறது. அன்று வரவேற்று வாழ்வளித்த மரப்பொந்துகளும், குகைகளும் இன்று மாட மாளிகைகளாக உருவெடுத்தன. கிழங்குகளும், கனிகளும் காய்களும் இன்று பக்குவ உணவாக பரிணமித்தன. இலே தழையும், விலங்கின் தோல்களும் உடையாக இருந்த நிலை மாறி, இன்று விரல் மோதிரத்தில் நுழைகின்ற மெல்லிய ஆடைகளாக மாறி உடலை மூடின. தேவையான பொருட்களும் திறமையான மாற்றங் களுடன் தேர்ந்து வந்தன. ஆவல் மிக மிக, நுண்மையும்