பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53


தன்மையும் மீறிக் கொண்டே வந்தன. கற்காலம் இரும்புக் காலமா பின்னர் பொற்காலமாகப் பிறப்பெடும் வந்தது. கற்பனையிலும் கூட முடியாது என்று கருதியதெல்லாம். இன்று கண்முன்னே படவும், கைகளால் தொடவும் என்று மிக அருகே வந்துவிட்டன. கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும் காட்சிகள் ஆட்சி புரியத் தொடங்கின. ஆகவே, ஒப்பற்ற நாகரிகக் காலத்தின் உச்சியிலே வாழ்கின் ருேம் நாம் என்று எண்ணும் பொழுதே, பழமையை எண்ணி கைகொட்டி நகைக்கத் தொடங்கினர்கள். ஆமாம்! தெளிவுருத ஆதிமனிதர்கள் வந்தது போலவே போளுர்கள். சிந்திக்கத் தொடங்கிய மனிதர்களின் சீர்மை யால், விந்தை மிகு படைப்புக்கள் வெளிவரத் தொடங்கின. விலங்கினம் செய்யாத சிந்திக்கும் வேலையை மனிதர்கள் தொடங்கினர். தொடர்ந்தனர். வாழ்க்கையில் மறுமலர்ச்சி வளையம் வந்தது. புத்துணர்ச்சி புதுபுதுத் தெம்பைத் தந்து புளகாங்கிதப்படுத்தியது. கைகளைக் கொண்டு கருவிகள் புனையத் தொடங்கினன். காலம் அவனுக்குக் கைகொடுத்து உதவியது. கோல மிகுந்த அறிவும் கூடவே ஆற்றலேத் தந்தது. வளர்ந்து வரும் மனித இனத்தின் தேவைக்கு ஏற்ப, பயன்படும் பொருட்களைத் தேடுகின்ற சூழல் எழுந்தது. தொழிற்புரட்சி, நூல்புரட்சி, அறிவுப் புரட்சி, அரசியல் புரட்சி என்று உலகின் எல்லா பக்கங்களிலும் எழுந்தன. பொங்கும் புதுமை வெள்ளம் கங்கு கரையின்றி ஒடி நிறைந்தது. எழிலாற் புதுமையிலே மக்களின் இதயம் மகிழ்ந்து கிடந்தது. வளம் நிறைந்த காட்சிகள். நலம் காட்டும் சுவையான உணவுப் பொருட்கள். வலிவுடைய எந்திரங்கள் வழியமைக்கும், சோதனைக் கருவிகள் வாழ்வுப் பாதையை அகலமாக்கிவிட்டன. அதன் விளைவாக, உலகம்