பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54


.துாரத்தில் சுருங்கிக் கொண்டது. மக்களின் ஆசையோ உலகமென விரிந்து நின்றது. அதன் பயகை, நாம், நாங்கள் என்ற சமுதாய உணர்வு, கொஞ்சங் கொஞ்சமாக நான், எனக்கு’ என்ற அளவில் சுருங்கிக் கொண்டது. இயற்கையின் அற்புதங்களை எண்ணி எண்ணி வியந்து: இயற்கையின் வழிகளை உன்னி உன்னி நடந்து; இயற் கையின் மாற்றங்களைக் கண்டு கண்டு மகிழ்ந்து; இயற்கையில் நிலவுகின்ற சக்திகளை நின்று நின்று உணர்ந்து; அதன் அன்பையும் ஆற்றலையும், காக்கும் பண்பையும் கடமை யையும் விழைந்து விழைந்து போற்றுகின்ற ஆதி மனிதர் களின் மனம், நாகரிக சமுதாயத்தினரிடமிருந்து நாகுக்காக விடைபெற்று ஒடி மறைந்தது. நவீன நாகரிக வாழ்க்கை அமைப்பால், பொற்காலம் தோன்றியது என்ருலும், கற்கால மக்களின் மனப்பாங்கும், பண்பாடும் கிட்டாத பொருளாகவே எட்டி நின்றன. இடையிடையே ஒதுங்கி, பல சமயங்களில் மறைந்தும் சென்றன. - உற்பத்திப் பொருட்கள் உயர்ந்தன. உரம் வாய்ந்த தொழிற்சாலைகள் பெருகின. உலகை வலம் வரும் வானுர் திகள், கப்பல்கள், பேருந்துகள், மகிழ்வுந்துகள் நாடெங்கும் நிறைந்தன. மக்களின் வாழ்க்கையோ மாபெரும் மாற்றத் தைப் பெற்றுக் கொண்டது. அறிவின் முதிர்ச்சியால் அருங்கண்டுபிடிப்புக்கள் விளைந்தன. அதுவே எந்திர காலமாக மாறியது. வல்லமை நிறைந்த காலமாக மாற்றிலுைம், மக்களின் வாழ்க்கையில் வல்லமையை நீக்கியது. அதாவது, அதிக ஓய்வைத்தந்தது. உழைப்பின்மையைத் தந்தது. இந்த ஓய்வும், உல்லாசமும், உழைப்பின்மையுமே ஒயாத பிரச்சினைகளை மனிதர் களிடையே உண்டுபண்ணத் தொடங்கின.