பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. விளையாட்டு ஏன் வேண்டும்? எண்ணமும் கவலையும் இரண்டறக் கலந்ததாகும். எண்ணங்கள் விரிய விரிய, எதிர்பாராத கவலைகளும் வந்து இதயத்தை சூழ்ந்து கொள்கின்றன. ஏனெனில் அறிவின் ஒளியையும், உரையாடலின் மகிமையையும், கற்பனையில் இன்பம் காணும் சுகத்தையும் மனிதன் ஒருவனே உலகில் அனுபவிக்கிருன். - இந்தக் கற்பனைச் செறிவும், கனிந்த எண்ணத் திறனுமே இன்றைய நவீன காலத்தின் சிறப்புக்கு அடித்தளமாக அமைந்திருக்கின்றன. இந்த அடிப்படையிலே தான் நாகரி கம் முளைத்தது. நல்ல பல எந்திரங்கள் விளைந்தன. கால்நடையாக நடந்தவன் இன்று வானிலே பறக்கிருன், நீரிலே மிதக்கிருேன். நிலத்திலே விரைகிருன். இதனலேயே அவனுக்குத் தேவைகள் (Needs) தேவைக்குமேல் பெருகின. உடைகளில் பல வண்ணங்கள். பல மாதிரிகள். உணவுவகை களில் பல்வேறு சுவைகள். இருக்குமிடங்களில் எத்தனை எத்தனையோ அமைப்புக்கள். வடிவங்கள். . 4