பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65


வல்லமையுள்ளவர்கள் சக்தியை அதிகம் செலவு செய்யாமல் லாவகமாக ஆடுகின்ருர்கள். பலஹீனமான ஆட்டக்காரர்கள், பல்வேறு நிலைகளில் தங்கள் சக்தியை செலவழித்தும், முயற்சித்தும் இலக்குவின் அருகிலேகூட செல்ல முடியாமல் திண்டாடி நிற்கின்ருர்கள். 'பயிற்சி இல்லையே, பயிற்சியை செய்யவில்லையே, முறை யாகக் கற்றுக்கொள்ளவில்லையே’ என்று பின்னுல்தான் வருந்துகின்ருர்கள். அதாவது ஆட்டத்தில் தோற்றுவிட்ட வர்கள் பின்னல் வருந்துவதுபோல, வயதான பிறகு அதிகம் வருந்தும் மக்களே நிறைய உண்டு. ஆட்டக்காரர்களாக வாழ்க்கை ஆட்டத்தை ஆடிட வந்தவர்கள், ஆடியே ஆகவேண்டும் என்ற நிலைக்கு எப்பொழுதும் ஆட்பட்டவர்களே! பெருங் கூச்சல் போட்டுக் கொண்டே ஒரு குழந்தை பிறக்கும் பொழுதே, பல பிரச்சினைகளுடன் தான் பிறக்கிறது. ஆனல், அதன் இயக்கம் இனிமையானதாக அல்லவா இருக்கிறது! கொஞ்ச நேரங் கழித்து, கைகளை கால்களை அசைத்தும் உதைத்தும், அழுதும் சிரித்தும் குழந்தை தன் இயக்கத் தைத் தொடர்கிறதே, அது தானக மூச்சிழுக்கத் தொடங் கிடும் வித்தைக்குத்தான். அந்த வித்தையின் முதிர்ச்சிதான் விளையாட்டாக பரிணமித்துக் கொண்டிருக்கிறது. தவழத் தொடங்கிய குழந்தைக்கு விளையாட்டுத்தான் உயிர் மூச்சாக விளங்குகிறது. வழிகாட்டுகிறது. எந்தப் பொருளையும் விளையாடும் பொருளாகக் கொள்கிறது. இல்லையெனில் உருவாக்கி அமைத்துக் கொள்கிறது.