பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68


அவர்கள் கூறுகின்ற காரணங்கள் மிக மிக அற்பமான வைகளாகும். விளையாட்டால் படிப்பு பாழாகிப்போகிறது. விளையாட்டால் அதிகப்பொருள் செலவாகிறது. விளை யாட்டால் நேரம் iணுகிவிடுகிறது. விளையாடுபவர்கள் முரட்டுத்தனம் உள்ளவர்களாக இருக்கின்ருர்கள். கோயில் மாடு போல வீதி சுற்றுகின்ருர்கள். அவர்களுக்குப் பிற் காலம் சிறப்பாக அமைவதில்லை என்பதே ஒரு சில குற்றச் சாட்டுக்களாகும். பள்ளியில் விளையாடும் மாணவர்கள், விளையாடவே போகாத மாணவர்கள் என்பதாகப் பிரித்து, அவர்கள் எவ்வளவு பேர் தேர்விலே தோற்றவர்கள், எத்தனை பேர் தேர்ச்சி பெற்றவர்கள் என்று கணக்கெடுத்துப் பார்த்தால், விளையாட்டில் கலந்து கொண்டவர்களில் தோற்றவர் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே இருப்பதை புள்ளி விவரங்கள் தெள்ளத் தெளிய எடுத்துக் காட்டுகின்றன. ஏதோ ஒரு சிலர் தேர்வில் தோல்வியடைகின்ருர்கள் என்பதை வைத்துக் கொண்டு, விள்ை யாட்டு படிப்பையே வீளுக்குகிறது என்று ஒருவர் கூறினல், சோறுவிக்கிக் கொண்டு ஒருவன் இறந்து போவதைப் பார்த்து, நீங்களெல் லாம் சாப்பிடாதீர்கள். சாப்பிட்டால் இவன்போல் தான் இறந்து போவீர்கள் என்று ஒருவன் கூறினால், அவனை பைத்தியக்காரன் என்று தானே பரிகசித்து ஒதுக்குவோம். அந்தநிலையில் தான் இந்தக் குற்றச்சாட்டைக் கூறுபவர் களும் இருக்கின்ருர்கள். விளையாட்டில் செலவாகின்ற காலமும் பொருளும் விளை யாடுபவர்களின் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் சிறந்த பண்புகளையல்லவா போதிக்கின்றன! ஒரு நிகழ்ச்சியை வைத்துக் கொண்டு, மொத்தத்திற்கும் முடிவு கட்டுவது அறிவுடையோரின் செயலல்லவே!