பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74


வென்று வளர்ந்தோங்கி விடுகின்றன. செடிகளுக்கு இடை பூருக செழித்து வளர்ந்து சிக்கல்களை உண்டு பண்ணு கின்றன. நல்ல பயனைத் தரும் செடியாகத் தான் விளையாட்டுக்கள் இருக்கின்றன. அதனைப் பாதுகாப்பவர்கள்தான்,வேண்டுமா வேண்டாமா என்ற விைைவ எழுப்பிக் கொண்டு இருக் கின்ருர்கள். பழுத்த மரத்தில் கல்லடியும், பயன்தரும் மனதருக்கு சொல்லடியும் விழுவது சகஜந்தான். வேலியானது பயிர்தனை மேய்ந்திட விதித்தால், காலனைவன் உயிர்களைக் கவர்ந்திட நினைத்தால், ஆலம் அன்னையர் பாலகர்க்கு அருத்துவ ரானல் மேலி தோர்ந்து உடன்யார் கொலோ விலக்குவார்! எனும் விவேக சிந்தாமணியின் பாடல்தான் நமது நினைவுக்கு வருகிறது. காக்கும் வேலியே பயிர்களை மேய்ந்தால், காலன் உயிர்களைக் கவர்வது போல்தான். அணைத்துப் பாலாட்டி அனுதினம் பாடுபட்டு அன்புடன் வளர்க்கும் அன்னையே, தன் பிள்ளைக்கு விஷம் ஊட்டில்ை, விஷயம் தெரிந்து அதனை யார் போய் தடுக்க முடியும்? இப்படித்தான் விளையாட்டைப் பாது காப்பவர்கள் இன்று இருக்கின்ருர்கள் ஒரு சிலர் வடிவாக! என்ன செய்வது! மனிதகுலம்காக்க, வளர்க்க வந்த விளையாட்டுக்கு இங்கு இப்படி ஒரு சோதனை என்ருல், அதனைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்! மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே உடல் இயக்கம் தோன்றியது என்று நாம் அறிந்திருக்கிருேம்.