பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79


மதசம்பந்தமாக நடக்கின்ற விழாக்கள், சம்பிர தாயங்கள், மற்றும் பழக்க வழக்கங்களின் வெளியீடாக எழுந்த நிலையே பல விளையாட்டுக்களாகப் பரிணமித் திருக்கலாம் என்றும் பிறப்புபற்றி விளக்கம் கூறுகின்ருர்கள் பலர். நாட்டின் தற்காப்புக்காகவும், எதிரிகளின் தந்திரம். நிறைந்த தாக்குதலைச் சமாளிக்கவும், மக்களை போருக்கு ஆயத்தப்படுத்தவும், சோம்பலின்றி வீரமுடன் வாழ ஊக்கு விக்கவும், அந்த அளவுக்கு மனவலிமையை உண்டு பண்ணு வதற்காகவும் விளையாட்டுக்கள் தொடங்கப் பட்டிருக்க வேண்டும் என்றும் சிலர் கூறுகின்ருர்கள். உதாரணத்திற்கு சதுரங்கம் ஆட்டத்தைக் கூறலாம். விளையாட்டானது கற்பனையாலும் கண்டுபிடிக்கப்பட்டி ருக்கலாம். உதாரணமாக கூடைப்பந்தாட்டம் போன்று. வேறு சில விளையாட்டுக்கள் மக்களின் பழக்க வழக்கங் களிலுைம், சமூகக்கலாச்சாரத்தினால், அரசியல் உறவினல், வாணிகக் கலப்பினுல் தோன்றியிருக்கலாம் என்று வரலாறு பற்றி விளக்கிக் கூறியிருக்கின்ருர்கள். வரலாறு எப்படித் தொடங்கியிருந்தாலும், மனித இனத்திற்கும், அவர்களின் வாழ்க்கை இன்பத்திற்கும், மறு. மலர்ச்சிக்கும் வழி அமைத்துத் தருகின்ற எழுச்சிக்கும் தான் விளையாட்டுக்கள் அமைந்திருக்கின்றன என்பதையே நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. விளையாட்டு என்பது நேரத்தை iளுக்கும் சோம்பேறி செயல் அல்ல. உடல் உறுப்புக்களுக்கு உன்னதமான உழைப் பையும், இணையிலா இன்பத்தை அளிக்கின்ற செயலையும் தந்திட, இயக்குவிக்கும் தன்மையுள்ள ஒரு வேலையாகும்.