பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81


இயக்கம் நிறைந்ததே மனித வாழ்க்கை. அந்த இயக்கம் o இயல்பாக மனிதர்களிடையே நாள் முழுதும் பரவிக் கிடக், கிறது. அதே இயக்க நல்ல வாகவும் அமையலாம் : அல்லனவாகவும் அமையலாம். ஆளுல், இயக்கமே மனித ---, இனத்தின் ஆதார சுருதி என்பதை மறந்து விடவே கூடாது. ஒரு சிலர் தங்கள் உடலை குதிருக்குள் கிடக்கும் நெல்லாக குனத்துக்குள் விழுந்த கல்லாக ஆக்கி இடர்ப் படுத்தி வைத்திருப்பார்கள். அவர்கள் தாங்கள் இளமைக் காலத்தில் துள்ளிக் குதித்து ஓடியதையும், தாண்டியதையும்

நினேத்து ஏக்கப் பெருமூச்சு விடுபவர்களாகவும் இருப்பது உண்டு. கல்லா இளமை என்று இளமைக் காலத்தைப் புலவர் பெருமக்கள் புகழ்ந்து பாடுவார்கள். வீர உணர்வும் அதே நேரத்தில் அறியாமையும் கலந்த இளமைப் பருவத்து குழந்தைகள், சிறுவர்கள் விளையாடி மகிழ்கின்ற காட்சி கண் கொள்ளாக் காட்சியாகும். காலம் போவது அறியாமல் குழந்தைகள் விளையாடு கின்ருர்கள். விளையாட்டை மறந்து அல்லது வெறுத்து ஒரு குழந்தை இருக்கிறது என்ருல், அது ஏதோ அடிப்படைக் கோளாருல் அவதிப்படுகிறது என்பதே அர்த்தமாகும். ஒரு குழந்தை ஆடாமல் அசையாமல் கிடக்கிறது என்ருல், ஒன்று குழந்தை நோய்வாய்ப்பட்டிருக்க வேண்டும் அல்லது குழந்தை இறந்திருக்க வேண்டும் என்கிருர் மேல் நாட்டறிஞர் ஒருவர். எனவேதான் விளையாட்டை மறந்திருக்கும் குழந்தை உலகிலேயே இல்லை என்று ஆணித்தரமாக அடித்துக்