பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. விளையாடுவது ஏன்?

    • tsara TTTTT-TT
இவன் இரத்தத் திமிர் பிடித்தவன், இதல்ைதான் இவன் இப்படி விளையாடித் திரிகிருன்.”
  • உண்டு விட்டு உட்கார்ந்திரு என்ருல், கொழுத்துப் போய் கேடு கெட்டு அலைகிருன் பார்.”

“எத்தனை முறை சொன்னலும், கிளிப் பிள்ளை போல் படித்தாலும், அந்த சிறுபிள்ளைத்தனம் போகவில்லை.” "கழுதை போல் வயதாகி விட்டது. விளையாட்டு என்ன வேண்டிக் கிடக்கிறது.” "தலைக்கு மேல் வேலை கிடக்கிறது. கொஞ்சம்கூட பொறுப்பு இல்லாமல் விளையாடப் போய் விடுகிருனே!’ விளையாடச் செல்கின்றவர்களுக்குக் கிடைக்கும் வசைமொழிகள்தான் மேலே கூறப்பட்டுள்ளவை. குற்றச் சாட்டுகளாகத் தொடங்கி, குதர்க்க மொழிகளாகப் பரவி, கடைசியில் கடுமையான சூழ்நிலைக்கும் ஆளாக்கி விடுகின்ற. சொற்ருெடர்கள்தான் அவை.