பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84


இப்படியெல்லாம் துாற்றித் தொலைப்பவர்கள், எத்தனை முறை சொல்லியும், இவர்கள் விளையாடப் போகின்ருர் களே ஏன்? என்ற ஒரு கேள்வியையும் கேட்டுக் கொண்டு. தற்குரிய நல்ல பதிலையும் தெரிந்துகொண்டு விட்டால், 으가 - 211 ம் ஆ இத்த পদগুr 3: குழி t"; பங் கள் இந்த நாட்டிலே தே ான்றியிருக் காது. விளேயாட்டை வெறுக்கத் துர எண்டியும் இருக்காது. விளையாடுவது ஏன் என்ற கேள்விக்கு விடையளிப்பது போல, அறிவியல் வல்லுநர்கள், உளநூல் வல்லுநர்கள் பலவாறு தேர்ந்து தெளிந்த கருத்துக்களைக கூறிச் சென்று இருக்கின்ருர்கள். 1. தேவைக்கு அதிகமான சக்தி நம் உடலில் தேங்கிக் கிடப்பதால் தான் (Extra Energy) நாம் விளையாடு கிருேம்.” நம்து வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் நிறை வேற, தினந்தோறும் உழைத்த பிறகு, மீதியாகி எஞ்சிக் கிடக்கின்ற சக்தியை பயன்படுத்த வே நாம் விளையாடு கிருேம், விளையாட்டு என்பது சக்தியை நல்ல முறையில் பயன்படுத்த உதவும் பண்பான சாதனமாகும். இவ்வாறு வீலர் எனும் ஜெர்மானிய தத்துவ ஞானி கூறியிருக்கிரு.ர். குழந்தைகள் நாள் முழுதும் விளையாடுகின்றனர் என்ருல் அவர்களுக்கு வாழ்க்கையை நடத்த வேண்டிய தற்கான முக்கிய வேலைகள் இல்லை. கடமைகள் இல்லை. அவற்றிற்காக சிந்திக்க வேண்டிய சூழ்நிலையில் இல்லை. அதல்ை கவலைகள் இல்லை. சக்தியை செலவு செய்கின்ற சந்தர்ப்பங்களும் இல்லை. ஆகவே தான், அவர்கள் அதிக நேரம் விளையாடுகின்றனர் என்று கூறுகின்ரு ர்கள். 2. நமது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒய்வும் பொழுது போக்கும் கட்டாயமாகத் தேவைப்படுகிறது. அதனல் தான்