பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தனை சூழ்நிலைகளையும் ஆள்கின்ற ஆற்றலை வளர்த்து ஆன்ற அமைதியையும் அளப்பரிய ஆனந்தத்தையும் அளிப்பது தான் உடல் இயக்க விளையாட்டுக்களாகும். 2. புலன் உணர்வு விளையாட்டு = - "பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திணிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கிளுல் பார்ப்பான் பசு ஐந்தும் பாலாய்ச் சொரியுமே” புலன்களைப் பற்றி திருமூலர் இவ்விதம் பாடுகின்றர். ப்ார்ப்பாகை உடலையும், பசுவாக ஐம்புலன்களையும், மேய்ப்பவனக மனதையும், பாலாக பயன்களையும் உவமித்துப் பாடுகின்ருர். ஐம்புலன்கள் தான் வாழ்க்கை இன்பத்திற்கு ஆதார மானவை. அவசியமானவையும் கூட. அவற்றின் ஆற்றல் குன்றிலுைம் குறைந்தாலும், உலக வாழ்க்கை ஒளி மாறிய நிலையில் தான் தோன்றும், துயர் தரும் . அத்தகைய அரிய புலன்களின் ஆற்றலே அடக்கி, அவற்றை வசப்படுத்திக் கொண்டால், அவை பாலாய்ச் சொரியும். இன்பப் பயனப் பொழியும். பொது அறிவுக்கும் சிறப்பு அறிவுக்கும் அறிவு கோலாய் அமைந்த ஐம்புலன்களையும் ஒரு முகப்படுத்தவும், உறுபலன் களை அளிக்கவும் உதவுகின்ற தன்மையில் முன்னணியில் நிற்பவை விளையாட்டுக்களேயாகும். - புலன் உணர்வு விளையாட்டுக்கள் என்பது புலன்களை விளையாட்டில் ஈடுபடுத்தி இன்பம் காண்பதாகும். கிரிக்கெட் போட்டி ஆட்டம் என்ருல் ஐந்து நாட்களாக இருந்தாலும் வெயில் மழை என்று பாராமல், கண்டும்,