பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சூதாடி 15 கார் நிறுத்தப்பட்டு, சீனு கீழே இறக்கப்பட்டார்- கார் மீண்டும் புறப்பட்டது. "எங்கே, வீட்டுக்கா, கிளப்புக்கா?" என்று கேட்டான் மோசஸ் ட்டுக்குத்தான். ஏண்டா மோசஸ்! உனக்குப் எத்தனை?" என்று ஐயர் கேட்டார். மூணு" என்று சுருக்கமாகப் பதிலளித்தான் மோசஸ். மூணு பசங்களுக்குத் தகப்பனாகி இருக்கிறே. சூதாட்டத்தை விடமாட்டேன்கிறயே ஏண்டா,சூதாட்டப் புத்தி இருந்தா எப்படியடா உருப்படமுடியும்?" என்று மறுபடியும் உபதேசம் செய்யலானார். அடிக்கடி மோட்டார் 'ஆனை உபயோகப்படுத்தித் தன் கோபத்தை மோசஸ் போக்கிக்கொள்ள முயன்றான். "மோசஸ்! ஒரு விஷயம் கேள். சூகாடி என்னடா சம்பாதிக்க முடியும். இல்லை, பணமே, அதிலே கிடைக்கிறதுன்னே வைச்சுக்கேடி, குதா டிப் பிழைக்கிறது ஒரு பிழைப்பாகுமா-மோசஸ்! என்று ஐபர் சூதாட்டத்தின் தீமைகளை மேலும் விவரிக்க லானார். மோசஸ் சலிப்பும் கோபமும் கொண்டவனாய், அவர் வார்த்தைக்கு 'உம்' கொட்டவில்லை. ஐயர், "ஏண்டா மோசஸ்! என் சொல்றது காதிலே விழயைா?" என்று கேட்டார். ஒரு சிரிப்புடன் மோசஸ் சொன்னான், "நாள் செவிடனல்ல, நீங்க பேசறது நல்லாக் காதிலே விழுகிறது' என்றான். அவன் கோபித்துக் கொண்டான் என்று ஐயர் தெரிந்துகொண்டார். ஆனால் அவன் கோபத்துக்குக் கார ணம் தெரியாது அவருக்கு.