பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வாழ்க்கைப் புயல் டேன் - அந்தக்கஞ்சாவாலே இப்படியாகிவிட்டேன்-அப்போ ஆள் வாட்ட சாட்டமாக இருப்பேன். என்னைத் துணை யாக வைத்துக்கொண்டு, காரியத்தைச் சாதித்துக்கொண்ட தோடு விடவில்லை, அந்த வைத்தி. என்னிடம் பேசிப் பேசி, எனக்கு நகை செய்யத் தெரியும் என்கிற விஷயத்தைத் தெரிந்துகொண்டார். உடனே பிளான் போட்டார். கோயி லிலே இருக்கிற முக்கியமான கல்லிழைத்த நகையை எடுத்து வருவாரு அவருடைய வீட்டிலேயே தனி அறை நான் அங்குசாமான்களோடு இருப்பேன்-வமா, அதைப் பெயர்த்துவிட்டு, வேறே வெள்ளைக்கல் புதைத்துவிடுவேன் கோயிலுக்குப் போய்விடும் நகை - வைரம் வைத்திக்கு நம்ம வேலைக்கும் பணம் கிடைக்கும் - இதுபோல,வைரம், பச்சை, கெம்பு, இப்படி முதலிலே, வேலை தீர்த்தாச்சு பிறகு தங்க நகையைக் கவனிக்க ஆரம்பிச்சோம். எண்டா தம்பி1 உனக்கு ஆச்சரியமாக இருக்கா? எப்படி இவ்வளவு தப்புத் தண்டா செய்துவிட்டு, வைத்தி, வெளியே இருக்கி றான், அதிலும் கௌரவமா இருக்கிறான்னு யோசிக்கிறயா! அதுபோல எவ்வளவோ பேர்டா. ஜெயிலுக்குள்ளே தான் திருட்டுப் பயல்கள் இருக்கிறதாக எண்ணாதே. ஜெயிக்காத வன், ஜெயிலிலே! ஜெயித்தவன் சுகத்திலே இருக்கிறான். கேள்,கதையை! இப்படி, தர்மகர்த்தா, கோயில் ஈகையைத் தீத்துக் கட்டிகிட்டு இருந்தாரா? நானும் அதையே பிழைப் க்கிட்டு, கொஞ்சம் சௌக்கியமாசுத்தான் இருந்தேன், காசு கையிலே நடமாட ஆரம்பிச்சதும்,குடி அதிகமாயி டுத்து-குடி அதிகமாயிடவே, பணம் தேடவேண்டிய அவசியம் வளசலாச்சி -- அதனாலே, கையில் நகை வருவது குறையவே-வேறே நகையைத் தேடவேண்டியதாச்சி. வைத்தி தனக்கு இனிமேல்பட அந்தமாதிரி காரியத்திலே இஷ்டமில்லைன்னு சொல்லிவிட்டான். கனவிலே சாமி வந்து