பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



28 வாழ்க்கைப் புயல் என்னிடமும் அதே பேரைத்தான் சொன்னான், இவன் துணியிலே பார்த்தா, 'V' என்று குறி இருந்தனு - எனக் குச் சந்தேகம் - இவனை விடக்கூடாது, பின் தொடரவேண் டும் என்று எண்ணம். இரயிலீவே ஏறிக்கொண்டான், செகண்டு கிளாசிலே. ஆரஞ்சு தருகிறான்,ஆப்பிள் தரு கிறான், எனக்கு .ஆனா,கூடமட்டும் வரவிடவில்லை.வண்டி புறப்பட்டது-நான் விடை பெற்றுக்கொண்டேன் - ஆசாமி, நான் தொலைந்தேன் என்று சந்தோஷப்பட்டிருப்பான்- நானா இவனுக்கு ஏமாறுகிறவன் - நமம் பொடிப்பயல் ஒரு வனை முன்னேற்பாடாக அனுப்பி இருந்தேன், திகளில் விசாரித்து வர பயல் இரண்டு நாள் கழித்து வந்து ஒன் னிடம் சொன்னான், தகவலை "அவர் பேர் வைத்தீஸ்வர முதலியாரு; ஊரிலே அவருக்கு ஈல்லவருன்னு பேரு! எல் லோரும் அவரிடம் மரியாதை காட்டுகிறார்கள். கோயிலுக்கு அவர் தர்மகர்த்தா" என்றெல்லாம் கூறினான். அத்தர் ஆறுமுக முதலியாக வேஷம் போட்ட ஆசாமியைப் போலி சிலே சிக்கிவிடலாம்னு கூட நினைச்சேன்- சிக்கிவிட்டா நமக்கு ஒரு இலாபமும் இல்லை - சரி கிடைத்தவரைக்கும் அவ னிடமே கரைப்பது என்று எண்ணி இரண்டொரு மாதம் காத்துக்கொண்டிருந்தேன் - ஆசாமி மாயவரம் பக்கம் தலை காட்டவே இல்லை ஏஜண்டுகளுக்குக் கடிதம் போட்டு இடம் வேறு ஏற்பாடு செய்துகொண்டான் போலிருக்கு. கடைசி யிலே ஊருக்கே போய், நேரடியாகவே பார்த்துவிட்டு வரு வதுன்னு போனேன் - பார்த்தேன் -கோயிலிலே கும்பிடு போட்டேன், "யார்? எந்த ஊர்?" என்று கேட்க ஆரம்பித் தான் -- அத்தர் ஆறுமுக முதலியார் என்று பெயரைக் வை னப்படுத்தினேன். யாரடா இவன், ஆள் மாறாட்டமாப் பேசுகிறான்" என்று முறைப்பாகப் பேசினான் - இதற்குள்ளே