பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

36 வரழ்க்கைப் புயல் பெறுவதைவிடச் சொந்தத்திலே வாங்கிவிடலாமே என்று எண்ணம் பிறக்கவில்லை. பிறந்தாலும், 'மாலையிலே அந்தச் சோலையிலே உள்ள மயக்க மருந்து' அந்த எண்ணத்தைக் கொன்றுவிடும். வாடகைப் பணத்தைச் சரியாகச் சிலசமயம் கொடுக்க மாட்டான், கொண்டான். சின்னான் சிறுவான். கொண் டான் கெஞ்சிப் பழக்கமில்லா தவன். எனவே, கோபமாகவே வீட்டுக்கு வருவான் -- மிகக் கஷ்டப்பட்டு விஷயத்தைத் தெரிந்துகொள்ளாள் - மீனா. பிறகு, அந்த மில்டரி ஓட்டல் 'அண்ணனை'ப் பார்த்து, நல்லதனமாகப் பேசி, கோழிகளைக் கொடுக்கும்படி சொல்வாள். அவனும் கொடுப்பான். மீனா வின் கடை நொடி பாவனை, முகவெட்டு எல்லாம் சின்னானுக் குப் பிடித்திருந்தது - ஆனால், 'அண்ணேன்' என்று அவள் கூப்பிடும்போது மட்டும் அவனுக்குக் கண்ணில் சால்னா மனளி விழுந்தமாதிரி எரியும். 'அண்ணே' என்று மீன சொன்ன உடனே சின்னான், "ஏண்டிம்மா தங்கச்சி!" என்று கேலியாகப் பதிலளிப்பான். முன் வார்த்தை தூது, பின் னால் வரும் வார்த்தைகள் சும்மா ஒப்புக்குக் கூறுவது, என் புது அவன் எண்ணம். மீனாவுக்கு அவனுடைய போக்கும் புரியாமல் போகவில்லை. ஆனால், கொண்டானுக்குத் துரோ கம் செய்ய அவள் மனம் ஒப்புவதில்லை கோழி வாங்கிப் போக வரும்போது, ஒரு கப் 'சாயா'வும் சின்னான் தரு "எண்ணே! அவருக்கு ஒரு ஐதை கோழியை விலைக்கேதான் வாங்கிக் கொடேன்; நீதான்,பகவான் புண் யத்தாலே எல்லா சம்பாதிக்கிறயே, இந்த உபகாரம் செய்யற தானேண்ணேன்" என்று மீனா கேட்பாள். சின்னான்,பரம திருப்தி அடைவான் -- ஆவட்டும் தங்கச்சி செய்வோம்! எனக்கும் ரொம்ப நாளா மனசிலே எண்ணம் உண்டு. வான்.