பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வாழ்க்கைப் புயல் சுவரை எடுக்கும் விஷயமாக, சுட்டிடக்காரருக்கும் : சின்னா லுக்கும் தகராறு, "கொஞ்சம் மாவு இடிக்கவேணும் மீனா,ஆள் வா வில்லை" என்று 'சேதி'யை ஆரம்பித்தான், சின்னான். உண்மையாகவே தான் அரிசியை ஆள் கொண்டுவந்து, கொடுத்தான் - மகிழ்ச்சியாகவே, மீனா மா இடிந்துக் கொண்டிருந்தாள். ஓட்டலில் கூட்டம் குறைந்தது. குறும் புக்காரராக இருந்த இரண்டோர் ஆட்களை கடை வீ திக்கு வேறு வேலையாக அனுப்பிவிட்டான். சின்னான், முஸ்தீப்பு செய்துகொண்டு, கல்லா'வில் வேறு ஆளை உட்காரவைத்து விட்டு.மாவிடிக்கும் இடம் சென்றான். அவன் வந்த பிறகு தான், அந்த இடமும் ஒரு குகைபோல இருப்பது தெரிந் தது, மீளுவுக்கு. கொஞ்சம் பயந்தாள். சின்னான், அவ ளருகே சென்று கொஞ்சநேரம் நின்றுகொண்டிருந்தான். இவளும் அவனைக் கவனிக்காதவள்போலவே மாவியத்து கொண்டிருந்தாள். போர் தொடுத்துவிடுவது என்று சின் னான் தீர்மானித்து, "தா!ஏன் இப்படி அவசர அவசாமாக வேலை செய்யணும்: கஷ்டமா இருக்குமே' என்று கூறிக் கொண்டை அவள் கரத்தைப் பிடித்தான். அவன் எப்பின் துமே பார்த்ததில்லை, அப்பப்பட்ட பார்வையை. மீனா கோபிக்கவில்லை, பதற தாபமான பரிதாபம் கப்பிய முகத்தடன் அவனைப் பார்த்து, "அண்ணே! வேண் டாம் அண்ணேன், அதெல்லாம். வேண்டாம்; உனக்குக் கோடி புண்யம் உண்டு" என்று சொன்னாள். அவளுடைய ஒவ்வொரு வார்த்தையிலும் தோய்ந்துவந்த சோகம், அவ னைச் செயலற்றவனாக்கிவிட்டது. அவளும் மௌனமானாள்! அவனும் செயலற்று நின்றான். அவள் முகம் கடுகடுத்துக் கொள்ளவில்-ை ஆனால் தாயிடம் மன்றாடும் குழந்தையின்