பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் விபசாரியானுள் முகமாக இருந்தது, மீனாவின் முகம். சிரிப்பதுபோலக் கூடக் காணப்பட்டாள் - அதானது பற்கள் வெளியே தெரிந் தன - முகத்திலே மலர்ச்சி இல்லை. சின்னான் தோல்வியை சமாளித்துக்கொண்டு, "சரி!சரி1 கலை நடக்கட்டும்" என்று கூறிக்கொண்டே, அவளை அவசரமாக ஒரு முத்தமிட்டான். 'ஐயோ! கர்மமே!! என்று-அவள் கூச்சலிடவில்லை -கழுத்து நெரிக்கப்பட்டால் சிறு குழந்தை அழுமே, அதுபோலச் சொல்லிக்கொண்டே அவன் பிடியிலிருந்து விலகினாள், வேக. மர்க. அந்த வேகத்திலே எதிரிலிருந்த சுவரிலே மோதிக் கொண்டான்! நெற்றியில் சிறிது காயம் - வீக்கம். சின்னான் சரேலென அந்த இடத்தைவிட்டுப் போய்விட்டான் -வழக்க மாக உட்காரும் இடத்தில் சென்று சோகமாக உட்கார்ந்து: --கொண்டான். அவள் மா இடித்துவிட்டு, அதலை ஒழுங்காகத் தட்டிலே கொட்டி ஓட்டல் ஆளிடம் கொடுத்துவிட்டு, வீடு வந்தாள். வரும்போது அள்ளும் சின்னானிடம் ஒன்றும் பேசவில்லை - சின்னானும் அவளைக் கவணிக்காததுபோலிருந்து விட்டான். கோழிகளை மட்டும் ஓட்டல் ஆள் கொடுத்தான். அந்து நெற்றிவீக்கத்தைத்தான்; மீனா, மின்னல்கொடி யாளின் படுக்கையறைக் கண்ணாடி முன்பு நின்று, பர்த்துக் கொண்டாள். ஆண்களின் காமாந்தகாரத்தைத் தனக்குச் சாதகமாக கொண்டு, அவள் - மின்னல்கொடியாள் ஷவரத் திருகுபில்லை யின் வனப்பைப் பார்த்துக்கொண்டிருந்தாள். வறுமையி னால் தாக்கப்பட்ட மீனா, ஆணின் காமத்துக்குப் பலியாக வில்லை - ஆனால், நெற்றித் தழும்பு, அவளுடைய வெற்றி யைக் காட்டும் குறியாக இருந்தது. தழும்பைத் தடவிப் பார்த்துக்கொண்டிருந்தபோது அந்தத் தரித்திரத்தால் தாக்குண்ட தையலின் மனதிலே, எவ்வளவு கொதிப்போ