பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-40 வாழ்க்கைப் புயல் யார் சுண்டார்கள்!! எத்தனை ஏழைகளுக்கு இத்தகைய 'தழும்பு'களோ! யார் கூறமுடியும்? நானூ வருஷங்களாகிவிட்டன. நானாவிதமான மாறு தன்னன். கொண்டான், சிறை சென்றுவிட்டான். சின்னான் பெரிய ஓட்டல்காரனாகிவிட்டான் -குடி வகையும் கொடுத்து வாடிக்கைக்காரரைப் பெருக்கிக்கொண்டு. 'முதலியாரை தேர்தல் சுரண்டிவிட்டது. ஜெயச்சந்திரருக்குத் தோல்வி யும் தேய்பிறையும்; சொத்தில், செல்வாக்கில் சகலத்திலும். மின்னல்கொடியாளிடம், மீனா பணிப்பெண் அல்ல, ஓட்டல் முதலாளி சின்னானின் வைப்பு'. குதிரை வண்டியில் வந்து இறங்குகிறாள், மின்னல் வீட்டுக்கு 'வாடிம்மா மீனா என்று வாவேற்கிறாள், மின்னல். "என்னக்கா ட்டம் புக்கு?" என்று விசாரிக்கிறாள், மீனா பழைய வுர் - நிலக்கண்ணாடியும் இல்லை. மீனாவின் நெற்றியின் தில கம் கொஞ்சம் கலைந்திருக்கிறது. மின்னல், அதனைச் சரி செய்துவிடுகிறாள்; அவள் கையில் அந்தத் தழும்பு தென் படவில்லை. நாலு ஆண்டுகள் ஆகிவிட்டன் அல்லவா! மேலும், மீனாவின் தழும்பு நெற்றியிலிருந்து மறைந்து இரு தயத்தில் பதிந்துவிட்டது. அவள் விபசாரியாகிவிட்டாள்! அக்காவுக்கு மற்றோர் தங்கை! ஆண்களின் நாமப் பசிக்கு மற்றோர் இரை. சமுதாயத்துக்கு மற்றோர் சனியன், வறுமையில் புழுத்த புழு