பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வரழ்க்கைப் புயல் மீட்டுக்கொண்டு வரும்போதுதான், எம்பெருமான் பிள்ளை, நாடோடி - நாய் - கழுதை என்று பேசித் தோட்டக்காக னிடம் தனக்குள்ள அக்கரையைக் காட்டிக்கொண்டிருந்தார். "என்ன பண்றதுங்க, நான் எவ்வளவோ சொன் னேன்" "ஆமாம்! முந்தி அவன் நாகப்பட்டணம் போறபோதே கூட வேண்டாம்னுதான் சொன்னே" "ஆமாங்க, ஏண்டாப்பா நாகப்பட்டணம் போசு வேணும்னு கேட்டேன். போய்த்தான் ஆகணும், அங்கே லேலை கிடைக்கும்னு சொல்லிவிட்டுப் போனான்...' போன, பத்தாம் நாள், பாண்டி ச்சேரிக்குப் போறேன்னு கடிதம் போட்டான்." "நானும்கூடக் கொஞ்சம் சந்தோஷப்பட்டனுங்களே, தொலையட்டும் பாண்டியிலேதானே, என் மச்சான் இருக்க றான், அவனோடு இருந்து தொலையட்டும்னு நினைச்சேன். அங்கே இரண்டு மாசம் சரியா இல்லை; நான் சிலோன் போகிறேன்டான்னா? போறவனோடு போய்க்கொண்டிருக்கிற போக்கு. உழைச்சி, ஊருக்கு அடங்கி இருக்கவேணும்னா, நாகப்பட்டி ணத்திலேயே இருக்கமாட்டானா, சிலோன் என் போகணும்? அதுதான் சொல்றனே, இதுகளுக்குக் காலிலே சக்கரம் இருக்கு, சுத்திகிட்டே இருக்கும். "நான் தலைப்பாடா அடிச்சிகிட்டேன். டே! மருதாச் சலம் வேண்டாம்டா . நாம்ப ஏதோ கொஞ்சம் கௌரவமா வாழ்ந்தவங்க, கால வித்யாசம், கொஞ்சம் நொந்துபோயிட் டோம்; ஊரோட இருந்து எதுவோ ஒரு பிழைப்புக்கான வேலையைக் கவனிப்போம், நீ இங்கேயே இருடான்னு சொன் னேன்; நீங்க சொல்ற மாதிரியா, அவன் காலிலே சக்க