பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளன் தொல்லை மிகுந்த வேலை; கடினமானது என்று கூற முடியாது; அவ்விதம் நான் சொன்னால் சிரிப்பார்கள்; கையிலே இருப்பது கடப்பாறை அல்ல, மண்வெட்டியு மல்ல, பேனா! தலையிலே மூட்டையுமில்லை, மண்சட்டியு மில்லை,தொப்பி அணிந்திருக்கிறேன்! உடலிலே கோட்டு; உத்யோகம் செய்கிறேன், ஆனால் உள்ளம் என்னமோ, உலைக் கூடத்தில் சிக்கிய இரும்புபோலிருந்தது ஓயாத விசாரம்; தீராத தொல்லைமட்டுமல்ல, நாளாகவாகத் தொல்லை வளர்ந்துகொண்டே வாலாயிற்று. எவ்வளவோ முயன்றும் அந்தத் தொல்லையைக் குறைக்கமுடியவில்லை, நான், நந்தீஸ் வார் மில்ஸ் சொந்தக்காரரும், நகர பரிபாலன சபையி தலைவரும், நகர காங்கிரஸ் கமிட்டியின் போஷகரும், குமரே சர் கோயில் தர்மகர்த்தாவும், கோவாபரேடிவ் சபை உப் தலைவரும், ஏழைகள் சகாய நிதிக்குக் காரியதரிசியும், என் தகப்பனாருக்குப் பள்ளிக்கூடச் சினேகிதருமான வைடூரியம்