பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கைப் புயல் செட்டியாரிடம் வேலைக்கு அமரும்போது இப்படி என் மனம் கசக்கிப் பிழியப்படும் என்று எண்ணினதில்லை. அவ ரும், இன்றுவரையில் என்னிடம் கடுகடுத்துக்கூடப் பேசின வால்ல.தம்பி! என்று கூடச் சிலசமயங்களிலே சுப்பிடுகிறார். அதிகமாகக் கோபம் வந்தால், "சுத்தப் பைத்தியக்காரப் பிள்ளையப்பா நீ. எப்படித்தான் நீ பிழைக்கப்போகிறாயோ தெரியவில்லை" என்று கூறுவார். இப்படி, என்னைக் கௌரு பலமாகவே நடத்துபவரிடம் வேலை பார்க்கிறேன். வேலை பார்க்கிறேன்' என்று அர்த்தமில்லாமல் சொல்லவில்லை உண்மையிலேயே, அவருடைய ஆட்கள் வேலை செய்கிறார் கள், அது சரியாகச் செய்யப்படுகிறதா இல்லையா என்பதைக் கவனித்துக்கொள்ளும் வேலைதான் எனக்கு. மற்றவர்கள் வேலை செய்கிறார்கள், நான் அதனைள மேற்பார்ளை பார்க்கி "பையன், பி.ஏ., தேறமாட்டான்போகிருக்கு. ஜோசி யர் திட்டமாகச் சொல்லிவிட்டார். அதனாலே உம்மிடம் அழைத்துவந்தேன். எதிலாவது இழுத்துப்போட்டு வையுங்கள். லேறே யார் இருக்காங்க எனக்கு என்று, என் தகப்பனார், வைடூரியம் செட்டியாரிடம் சொல்க்கி முடிக்கப் பதினைந்து நிமிஷங்கள் ஆயின. ஆஸ்தமா இருமல், என் அப்பாவுக்கு. வைடூரியம் செட்டியார், நெடுநேரம் யோசித்து, "சரி! தம்பி நம்மிடம் இருக்கட்டும், சந்தர்ப்பம் போல் பாங்கியோ, முனிசிபாலிடியோ ஏதோ ஓர்இடம் பார்ப்போம். தற்போது, ஒன்றும் காலி இல்லை ங்கே எல்லாம்" என்றார். என் தகப்பனார், "எப்படியோ செய் யுங்க,இனி அவன் உங்க மகன்போல" என்று கூறி என்னை வைடூரியம் செட்டியார்டம் ஒப்படைத்தார். செட்டியார். அப்போது, மாதூர்ழ் என்ற ஓர் விடுதி கட்டிக்கொண்